உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

நைடத உரை

திருத்தணிகை சரவணப் பெருமாளையரும் அவர் மகனார் கந்தசுவாமி ஐயரும் நைடதத்துக்கு உரை எழுதினார்கள். அந்த நூல் சுபகிருது வருசம் வைகாசி மாதம் கல்வி விளக்க அச்சுக் கூடத்தில் அச்சிற்பதிப் பிக்கப்பட்டது. அந்நூலுக்கு, “யூனிவர் ஸிட்டி யென்னும் சகல கலா சாஸ்திர சாலைத் தமிழ்த் தலைமைப் புலவராகிய” மழவை மகாலிங்கையர் அளித்த சிறப்புப் பாயிரம் இது:

66

“மதிக்கண மொருங்கு கிடந்தென வயங்குஞ்

சில்லிய விறாலின் றிரளினை வான்கழை கோடுகொண் டுழுதிடக் கொட்டிய செந்தேன் அருவிக டுயல்வரு மமைதி பூமாதின் றடமுலைச் செம்மணித் தாழ்வட மேய்க்கு மிமயமால் வரையி னிருந்தவத் தெழுந்த மரகதக் கொம்பரோர் மாவுறை முதலைத் தழீஇயெண் ணான்கறந் தப்பா தியற்றுங் கச்சியின் கீழ்பாற் கடற்கோட் டிருந்த

5

மியிலையூ ரகத்தி னயிலையோர் கரங்கொண்

10

டடற்சூ ருயிர்குடித் தமரரைப் புரந்த

கந்தனே ஞானசம் பந்தனாக் காழியி

னவதரித் தமண்களை யனைத்தும் வேர்போக்கிச்

சைவப் பைங்கூழ் தழைவித் ததன்பின்

கடத்துறு மத்தியைக் கண்டு மட்டிட்ட

15

புன்னையங் கான லெனப்புகல் பதிகந்

தன்னான் முன்னர்த் தகைசா லுருவம் பெற்றபூம் பாவை யுற்றநற் குலத்தோன் குறிப்பறிந் தீகுவ துத்தமக் கொடையன் றிவனாற் பொருணமக் கெய்து மென்றுள்ளத் துள்ளலு மின்றியோன் விள்ளரு மகிழ்ச்சி பூத்திட வளித்தல் பொற்புறு முதற்கொடை யானெனக் கொண்ட வருமைசேர் வள்ளல் அயலவர் நண்பின ரரிகளா மூவகை மற்றையர்க் குளநண் புற்றவோத் தகையே

20

25

யிவர்க்குள தெனச்சொ லேதமில் குணத்தோன்