பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ko- செந்தமிழ் வள்ளல் சீதக்காதி (உரிமம் பெறுவதில் கீழக்கரை மரைக்காயர்களும் கலந்து) கொண்டு முத்து வணிகர் செய்து வந்ததால் கீழக்கரை காயல்பட்டணம் மரைக்காயர்களுக்கிடையே குரோதமும், வெறுப்பும் வளர்ந்து வந்தன. இவர்களது சச்சரவை தீர்த்து வைப்பது போர்ச்சுக்கீசிய அலுவலருக்கு பெருத்த தலைவலி யாக அமைந்தது. இதனால் போர்ச்சுக்கீசியர் காயல்பட்டணத்தில் கி.பி.1525-ல் 16 வீரர்களைக் கொண்ட அணி ஒன்றினை நிறுத்தி வைத்தனர். கலக்கமடைந்த முஸ்லிம் வணிகர்களுக்கு ஆதரவாக கோழிக்கோடு மன்னர் அவரது படைவீரர்கள் கொண்ட அணியினை காயல்பட்டனத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த இரு படைகளுக்கிடையேயான மோதல்கள் அதிகரித்து வந்ததால் கி.பி.1528-ல் மற்றுமொரு அணியினையும் காயல் பட்டனத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த அணி போர்ச்சுக் - கிசி யர்களால் முழுமையாக தோற்கடிக்கப்பட்டது. இத்தகைய குழப்பமான சூழ்நிலை போர்ச்சுக்கீசியரது முத்து வணிகத்திற்கு சாதகமாக இல்லாத காரணத்தினால் போர்ச்சுக்கீசிய வணிகர்களு மீ. அலுவலர்களும் காயல்பட்டணத்திற்கு பதிலாக இன்னும் சற்று வடக்கேயுள்ள கிழக்கரை மீது தங்கள் கவனத்தைச் செலுத்தினர். கடல் முத்துக்களைப்பற்றி ஏற்கெனவே போர்ச்சுக்கியர்கள் அறிந்திருந்தனர். இந்த முத்துக்கள் பாபிலோன், எகிப்து, கிரீஸ், ரோம, சீனம், பாரசீக வளைகுடா ஆகிய இடங்களில் மிகுதியாக கிடைக்கிறது என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஆனால் இந்த | முத்துக்கள் தரத்திலும், அளவிலும் மிகவும் குறைவானதாக இருந்தன. அதனால் மன்னார் வளைகுடாவில் விளைகின்ற முத்துக்களை உலகின் பல பகுதியிலும் உள்ளவர்களும் விரும்பி வாங்கி வந்தனர். நமது நாட் டின் இதிகாசமான இராமாயணத்தில், கபாடபுரத்திலிருந்த பாண்டியனது மாளிகை யின் துழைவாயிலிலும், முகப் பிலு ம இந்த முத்துக்களைக் கொண்டு அலங்காரர் செய்திருந்ததாக Ψβασαααααα και θάλαά σναουδά) «52λαώ)&Φούσσα σωgν