உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -18

பத்துப்பாட்டு என்பது ஒரு தொகை நூல். கடைச்சங்க காலத்தில் இருந்த புலவர்கள் பாடிய பத்துப் பாட்டுக்கள் இதில் தொகுக்கப் பட்டுள்ளன. அப்பத்துப் பாட்டுகளில் குறிஞ்சிப்பாட்டு என்பதும் ஒன்று. குறிஞ்சிப்பாட்டைப் பாடியவர் கபிலர் என்னும் புலவர். இப்பாட்டில் அகப்பொருள் செய்தி (காதல் செய்தி) கூறப்படுகிறது. இப்பாட்டின் இறுதியில், “ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு” என்று எழுதப்பட்டிருக்கிறது.

குறிஞ்சிப்பாட்டில் தமிழ் மொழி இலக்கணம் கூறப்பட வில்லை. காதற் செய்தியாகிய அகப்பொருள் கூறப்படுகிறது. ஆனால், அடிக்குறிப்பு, "தமிழ் அறிவித்தற்கு”ப் பாடிய குறிஞ்சிப் பாட்டு என்று கூறுகிறது. இதன் பொருள் என்ன? அகப்பொருளைக் கூறினால் ஆரிய அரசன் எவ்வாறு தமிழை அறிந்துகொள்வான்? இங்குத் தமிழ் என்பதன் அர்த்தம் என்ன?

மாறன் பொறையனார் என்னும் புலவர் ஐந்திணை ஐம்பது என்னும் நூலை இயற்றியிருக்கிறார். ஐந்திணைஐம்பது என்பது அகப்பொருளைக் கூறும் நூல். அதாவது, தலைமகன் தலைமகளின் காதல் செய்திகளைக் கூறுகிறது. இந்நூலின் பாயிரச் செய்யுள் இது:

பண்புள்ளி நின்ற பெரியார் பயன்தெரிய

அன்புள்ளி மாறன் பொறையன் புணர்த்தியாத்த ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ்ச் சேரா தவர்,

இந்தச் செய்யுள் ஐந்திணை ஐம்பதைப் படியாதவர் செந்தமிழ் அறியாதவர் என்று கூறுகிறது. இதன் கருத்து என்ன? ஐந்திணை ஐம்பதைக் கற்காமலே பெரும்புலவராக, செந்தமிழ்ப் புலவராகப் பலர் இருக்கின்றனரே! ஐந்திணைஐம்பது தமிழ்மொழி இலக்கணத்தை உணர்த்தும் நூலன்று; அது காதற் செய்தியைக் கூறுகிறது. இந்நூலைக் கல்லாதவர் “செந்தமிழ் சேராதவர்” என்பதன் கருத்து என்ன?

எனவே, தமிழ் என்பதற்குத் தமிழ் மொழி, இனிமை என்பவை தவிர வேறு ஏதோ பொருள் இருக்க வேண்டும் என்பது தெரிகிறது. அப்பொருள் என்ன என்பதை மேலும் ஆராய்ந்து காண்போம்.

பரிபாடல் என்னும் தொகைநூலில், 9-ஆம் பரிபாடல், முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள திருப்பரங்குன்றத்தைப்