உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள்

கடவுள் என்னும் சொல்லைக் கேட்டதும் முழுமுதற் பொருள் ஆகிய இறைவனை நினைக்கிறீர்கள். ஆம்; எல்லாம் கடந்த இறைவ ஆ னான பரம்பொருளுக்குக் கடவுள் என்பது பெயர். முழுமுதல்வன் அல்லாத சிறு தெய்வங்களையும், அவ்வத் தெய்வங்களின் அடைமொழிப் பெயருடன் சார்த்திக் கடவுள் என்னும் சொல்லை வழங்குவதும் உண்டு. உதாரணமாக: சுறவுக்கொடிக் கடவுள் (மன்மதன்), கரும்புடைக் கடவுள் (மன்மதன்), கனைகதிர்க் கடவுள் (சூரியன்), நான்முகக் கடவுள் (பிரமன்), கடவுட் சாத்தன். கடவுட் பத்தினி முதலியன.

பண்டைக்காலத்திலே, கடவுள் என்னும் இந்தச் சொல், முற்றத் துறந்த முனிவருக்கும் பெயராக வழங்கப்பட்டது. அதாவது, துறவிகளுக்குக் கடவுள் என்ற பெயரும் உண்டு. இக்காலத்தில், இச்சொல் இந்தப் பொருளை இழந்துவிட்டுத் தெய்வம் என்னும் பொருளை மட்டும் கொண்டுள்ளது. இதனை ஆராய்வோம்.

முனிவருள் பெரியவன் முகத்து நோக்கி, ‘ஒன்று

இனிதுளது உணர்த்துவது அடிகள்' என்றலும்

பனிமலர்த் தாமரைப் பழன நாடனைக்

கனியமற் றின்னணம் கடவுள் கூறினான்

என்பது சூளாமணி காவியம், இரதநூபுரச் சருக்கம், 78-ஆம்

செய்யுள்.

இந்தச் செய்யுளில், பயாபதி என்னும் அரசன் முனிவர் ஒருவரை வணங்கி, தனக்கு அறநெறி கூற வேண்டும் என்று வேண்டிக்கொள்ள, அந்தக் கடவுள் (முனிவர்) அவ்வரசனுக்கு உபதேசம் செய்தார் என்று கூறப்படுகிறது. இதில், முனிவர் கடவுள் என்று கூறப்படுவது காண்க. சீவக சிந்தாமணி என்னும் காவியத்திலும் முனிவர்கள் கடவுளர் என்று கூறப்படுகின்றனர்.

காசறு துறவின் மிக்க கடவுளர் சிந்தை போல

மாசறு விசும்பின் வெய்யோன் வடதிசை யயன முன்னி