உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

என்றும் அவர் கூறியிருப்பது காண்க. இவற்றில், முனிவர்களும் துறவிகளும் கடவுளர் என்று கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்.

கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதை என்னும் காவியத்திலும், முனிவர்களும் துறவிகளும் கடவுளர் என்று கூறப்படுகின்றனர். அவற்றில் சிலவற்றைக் காட்டுவோம்.

பட்டதை அறியான் பயநிலங் காவலன்

கட்டழல் எவ்வமொடு கடவுளை வினவ4

தன் தேவியைப் பிரிந்த சதானிகன் என்னும் அரசன் ஒரு முனிவரிடம் சென்று தனக்கு நேர்ந்ததைக் கேட்டான். இதில் முனிவன் கடவுள் எனப்படுகிறான்.

தேவ குலனும் தேசிகப் பாடியும் மாவும் தேரும் மயங்கிய மறுகும்

காவும் தெற்றியும் கடவுட் பள்ளியும்5

உதயணன், கனவு கண்டு அதன் கருத்தை அறிந்துகொள்ள விரும்பி முனிவர் இருக்கும் இடம் சென்று அவர்களிடம் தனது கனவைக் கூறி அதன் கருத்தை விளக்கும்படி கேட்கிறான்.

அளப்பரும் படிவத்து அறிவர் தானத்துச் சிறப்பொடு சென்று சேதியம் வணங்கிக் கடவது திரியாக் கடவுளர்க் கண்டு நின்றிடை யிருள்யாம நீங்கிய வைகறை இன்றியான் கண்ட தின்னது மற்றதை என்கொல் தானென நன்கவர் கேட்ப

உருத்தகு வேந்தன் உரைத்ததன் பின்றை

6

விரிசிகை என்பாளின் தந்தை, விரிசிகையை உதயணனுக்கு மணம் செய்வித்துத் தான் துறவறம் பூண்டு முனிவர் வேடத்துடன் காட்டுக்குச் சென்றான். அப்பொழுது அவன் மனைவி வருந்தினாள். அதற்கு அவன் இளகானாகி முனிவர் வேடத்துடன் சென்றான். முனிவர் வேடம் கடவுட் படிவம் என்று கூறப்படுகிறது.

வடுத்தீர் மாதவம் புரிவேன் மற்றெனக் கேட்டவள் கலுழ வேட்கையி னீக்கிக் காசறு கடவுட் படிவம் கொண்டாங்கு ஆசறச் சென்றபின்...7

7