உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -18

கடாய் மொழியில் திங்கள் டஞ்சு என்றால் பிறைச்சந்திரன் என்பது பொருள்.

இந்தத் திராவிட இன மொழிகளில் இச்சொல் வழங்கி வருகிறபடியால் இது மிகப் பழைய சொல் என்பது தெரிகிறது.

முற்காலத்தில் தமிழர் திங்கள் என்னும் சொல்லைப் பேச்சு வழக்கிலும் நூல்வழக்கிலும் பயின்று வந்தனர். ஆனால், அண்மைக் காலத்தில் அச்சொல்லை மறந்துவிட்டு மாதம் என்னும் வேறு சொல்லை வழங்குகிறார்கள். கையில் உள்ள காசைப் புதைத்து வைத்துவிட்டு அடுத்த வீட்டுக்காரனிடம் கடன் வாங்கிச் செலவு செய்கிறதுபோல இருக்கிறது இச்செயல்.

திங்கள் என்னும் சொல் பண்டைக்காலத்தில் வழங்கப்பட்டதைப் பழைய நூல்களிலிருந்து காட்டுவோம்.

வளைவாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல்

தளைவாய் நறுங்கண்ணித் தண்ணம் துழாய்க்கு, வண்ணம் பயலை விளைவான் மிகவந்து, நாள் திங்கள்

ஆண்டு ஊழி நிற்கஎம்மை

உளைவான் புகுந்துஇது ஓர்கங்குல் ஆயிரம் ஊழிகளே

என்பது சடகோபர் அருளிச்செய்த திருவிருத்தம். இதில் மாதம் என்னும் சொல் திங்கள் என்று வழங்கப்பட்டிருத்தல் காண்க.

களம்புகல் ஓம்புமின் தெவ்வீர்! போரெதிர்ந்து

எம்முளும் உளனொரு பொருநன் வைகல்

எண்டேர் செய்யும் தச்சன்

திங்கள் வலித்த கால்அன் னோனே

என்பது புறநானூறு, 87-ஆம் செய்யுள்

66

-

பகைவர்களே! போர்க்களத்திற்குப் போகாதீர்கள். போரில் வீரனாகிய ஒருவன் எங்களிலும் ஒருவன் இருக்கிறான். அவன் எத்தகையவன் என்றால், நாள்தோறும் எட்டுத் தேர்களைச் செய்யும் திறமையுள்ள தச்சன், ஆராய்ந்து பார்த்து ஒரு திங்கள்வரையில் செய்து