உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

55

முடித்த ஒரு தேரின் சக்கரத்தைப் போன்றவன்” என்பது இதன் பொருள். இதில் திங்கள் என்னும் சொல் வழங்கப் பட்டிருப்பது காண்க.

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்

எந்தையும் உடையேம் எங்குன்றும் பிறர்கொளார்

இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்

வென்றெறி முரசின் வேந்தர்எம்

குன்றுங் கொண்டார் யாம் எந்தையும் இலமே

என்பது புறநானூறு, 112-ஆம் செய்யுள்.

உரை இல்லாமலே செய்யுளுக்குப் பொருள் விளங்குகிறது. ஆயினும் இதன் பழைய உரையைத் தருகிறோம்: "மூவேந்தரும் முற்றியிருந்த அற்றைத் திங்களின் அவ்வெள்ளிய நிலவின்கண் எம்முடைய தந்தையையும் உடையேம்; எம்முடைய மலையையும் பிறர் கொள்ளார். இற்றைத் திங்களது இவ்வெள்ளிய நிலவின்கண் வென்றறைந்த முரசினையுடைய அரசர் எம்முடைய மலையையுங் கொண்டார்; யாம் எம்முடைய தந்தையையும் இழந்தோம்.’

و,

இவ்வாறு உரை எ எழுதிய இப்பழைய உரையாசிரியர் - (இவர் பெயரும் இவர் இருந்த காலமும் தெரியவில்லை) விளக்கமும் எழுதியிருக்கிறார். அவ்விளக்கம், திங்களை மாதம் என்பாரும் உளர் என்பது. அதாவது, பண்டைக் காலத்தில் திங்கள் என்னும் சொல் பேச்சு வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் வழங்கப்பட்டிருந்த தென்பதும், இவ்வுரையாசிரியர் காலத்தில் இச்சொல் வழக்கு மாறி, மாதம் என்னும் வேறு சொல் சிலரால் வழங்கத் தொடங்கியது என்பதும் தெரிகிறது.

கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சூடாமணி நிகண்டு, மதியொடு திங்கள் சொல்லின் மாதமே பேதமில்லை

"

என்று கூறுகிறது. அதாவது, மதி, திங்கள் என்னும் சொற்கள் மாதத்தைக் குறிக்கும் பெயர்கள் என்று கூறுகிறது. நிற்க.

திங்கள் என்னும் சொல் நிலாவைக் குறிக்கும் பெயர் ஆகும். வெண்ணிலாவுக்குத் திங்கள் என்று பெயர் உண்டு. சந்திரன் பெயராகிய திங்கள் என்பதிலிருந்துதான், திங்கட்கிழமை என்னும் பெயரும் ஏற்பட்டது. அதாவது, திங்களுக்கு (நிலாவுக்கு) உரிய நாள் என்பது பொருள்.