உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

நிலாவைக் குறிக்கும் திங்கள் என்னும் சொல் மாதம் என்னும் பொருளை எப்படிப் பெற்றது?

பண்டைக் காலத்திலே மக்கள், திங்களின் (நிலாவின்) தேய்வை யும் நிறைவையும் கொண்டு மாதத்தைக் கணக்கிட்டார்கள். திங்களாகிய வெண்ணிலா பதினைந்து நாள் வளர்ந்து பதினைந்து நாள் தேய்கிற காலத்தை முப்பது நாட்களை ஒரு திங்கள் என்று கணக்கிட்டு வழங்கினார்கள். ஆகவே, முதலில் நிலாவுக்குப் பெயராக வழங்கிய திங்கள் என்னும் பெயர், பிறகு முப்பது நாட்களைக் கொண்ட ஒரு காலத்திற்குப் பெயராகவும் வழங்கப்பட்டது, இதனால்தான், தமிழ் நூல்களிலே, திங்கள் என்னும் சொல் சந்திரனுக்கும் மாதத்திற்கும் பெயராக வழங்கப் பட்டுள்ளதைக் காண்கிறோம்.