உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

அறிவுடையராக்க வேண்டும், இருபால் மக்களும் அறிவுடையராய் இருக்க முடியும் என்பதே திருவள்ளுவரின் கருத்து. இக்கருத்துக்கு மாறுபடப் பரிமேலழகர் கூறுவது பொருந்தாது. நிற்க.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்

என்னும் குறளில் சான்றோன் என்பதற்குக் கல்வி கேள்விகளான் நிறைந்தவன் என்று பரிமேலழகரும் பிறரும் உரை கூறியிருப்பது பொருந்தாது. இதற்குச் சரியான செம்பொருள் என்னவென்றால், இதுவாகும்:

“தன் மகனை வீரன் (சான்றோன்) என்று பிறர் கூறக்கேட்ட தாய், அவனைப் பெற்றெடுத்த காலத்தில் அடைந்த மகிழ்ச்சியைப் பார்க்கிலும் அதிகமாக மகிழ்ச்சியடைவாள்” என்பதே இந்தக் குறளின் செம்பொருள் ஆகும். எப்படி? இதனை விளக்குவோம்.

“புதல்வரைப் பெறுதல்” என்று பரிமேலழகர் மாற்றிப் பெயர் வைத்துக் கொண்ட “மக்கட்பேறு” என்னும் அதிகாரத்தில், திருவள்ளுவர், ஆண், பெண் ஆகிய இருபால் மக்களுக்கும் பொதுவாக எட்டுக் குறள்களைக் கூறியுள்ளார். இரண்டு குறளை மட்டும் ஆண்மகனுக்காகக் கூறி யிருக்கிறார். ஆண்மகனுக்காகக் கூறப்பட்ட இரண்டு குறள்களில் ஒன்றுதான் நாம் இங்கு ஆராய்கிற “ஈன்ற பொழுதில்” என்னும் குறள். ஆகவே, இந்தக் குறளில், சான்றோன் என்பதற்கு வீரன் என்று பொருள் கொள்ள வேண்டும். ஏனென்றால், “தம்மிற் றம்மக்கள்”, “பெறுமவற்றுள் யாமறிவதில்லை” என்னும் இரண்டு குறள்களிலே, இருபால் மக்களும் அறிவுடையராக இருப்பது எல்லோருக்கும் இனிது என்றும், அறிவுடைய மக்களை விட வேறு சிறந்த பேறு இல்லை என்றும் கூறின பிறகு ண்மகனை மட்டும் தனியாகப் பிரித்து அவன் அறிவுடைமையைச் சிறப்பாகப் பாராட்டினார் என்பது பொருந்தாது. ஆகவே, இந்தக் குறளில், சான்றோன் என்னும் சொல்லுக்கு அறிஞன் என்று பொருள் கொள்வது பொருந்தாது.

இக்குறளில் வாசகரை மயங்கச் செய்வது, "கேட்ட தாய்' என்னும் சொல், “தன் மகனைச் சான்றோன் எனக் கண்ட தாய்” என்று கூறாமல், “கேட்ட தாய்” என்று கூறியிருப்பது, பரிமேலழகர் உரை சரியான உரைதான் என்று நினைக்க இடந்தருகிறது. தன் மகன்