உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

66

65

“தான் பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மிக மகிழும், தன் மகனைக் கல்வி கேள்விகளான் நிறைந்தானென்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாய்”

இவ்வாறு உரை எழுதிய பரிமேலழகர், மேலும், கீழ்வருமாறு விளக்கம் கூறுகிறார்:

66

“கவானின்கண் (துடைமீது) கண்ட பொது உவகையினும் சால்புடையவன் எனக் கேட்ட சிறப்பு உவகை பெரிதாகலின் 'பெரிதுவக்கும்' எனவும், பெண் இயல்பால் தானாக அறியாமையின், கேட்ட தாய் எனவும் கூறினார்.

وو

பரிமேலழகர் கூறிய இவ்வுரையில் சில தடைகள் நிகழ்கின்றன. பெண் இனத்துக்கே தாமாக அறியும் அறிவு இல்லை என்று பரிமேலழகர் முடிவுகட்டிவிட்டார். “பெண் இயல்பால் தானாக அறியாமையின் கேட்ட தாய் எனவும் கூறினார்” என்று அவர் விளக்கம் கூறியது காண்க.

ஆண்களிலும் தாமாக அறியும் சுயஅறிவு இல்லாதவர் பலர் இருக்கிறார்கள். பெண்களிலும் தாமாக அறிவும் சுயஅறிவுள்ளவர்கள் பலர் இருக்கிறார்கள். இதனை உலகத்தில் காண்கிறோம். ஆனால், பரிமேலழகர், பெண்மக்களுக்குச் சுயஅறிவு இல்லை என்று கூறுகிறார். இதனை நாம் எவ்வாறு ஏற்றுக்கொள்வது? பரிமேலழகர் கூறுவது, திருவள்ளுவர் கருத்துக்கும் முரண்படுகிறது. திருவள்ளுவர் ஆண், பெண் ஆகிய மக்கள் எல்லோரும் அறிவுடையவராக இருக்க முடியும் என்னும் கருத்துள்ளவர். என்னை?

தம்மிற் றம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது

என்றும்,

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற

என்றும் அவர் கூறியுள்ளன காண்க.

இக்குறள்களில், திருவள்ளுவர் பொதுவாக மக்கள் என்று கூறுகிறபடியினாலே, ஆண் பெண் ஆகிய இருபால் மக்களும் அறிவுடையராய் இருத்தல் வேண்டும், இருபால் மக்களையும்