உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாடை

தில்லைச் சிதம்பரத்திலே, சிற்றம்பலத்திலே நடராசப் பருமானுக்குப் பாவாடைச் சிறப்பு நடப்பதாகக் கேள்விப்பட்டேன். இதனைத் திருப்பாவாடைத் தரிசனம் என்றும் கூறுகிறார்கள். பாவாடை என்றால் சிறுமிகள் உடுத்துகிற உடை அல்லவா? பாவாடைச் சிறப்பு என்றால், சிதம்பரம் கோயிலிலே தில்லைச் சிவகாமசுந்தரிக்குப் பட்டுப் பாவாடை சார்த்திச் சிறப்புச் செய்வார்கள் போலும் என்று எண்ணினேன்.

திருப்பாவாடைச் சிறப்பு என்று இந்தக் கோவிலிலேதானே கேள்விப்படுகிறோம். வேறு கோவில்களிலே திருப்பாவாடைச் சிறப்பு என்று கேட்டதில்லையே! எல்லாக் கோவில்களிலும் அம்பிகைக்குப் பாவாடை சார்த்துவது வழக்கமாக இருந்தும், திருப்பாவாடைத் தரிசனம் என்று கூறுவதில்லையே என்கிற ஐயம் என் மனத்தில் இடங்கொண்டது. திருப்பாவாடை என்றால் என்ன? அது பாவாடைதானா, அல்லது இதற்கு வேறு ஏதேனும் பொருள் உண்டா? நெடுநாள் சென்றும் என் ஐயம் தீரவில்லை.

“தென் இந்திய சாசனங்கள்” என்னும் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது அச்சாசனங்கள் ஒன்றில், திருப்பாவாடைச் சிறப்பு என்னும் வாசகத்தைக் கண்டேன். கண்டதும், முன்னமே மனத்தில் தங்கியிருந்த ஐயம் நினைவுக்கு வந்தது. அந்தச் சாசனத்தைப் படித்தேன். அது தில்லை நடராசர் கோவிலில் உள்ள சாசனந்தான். சகல புவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ அவனியாளப் பிறந்தாரான கோப்பெருஞ் சிங்கத்தேவர் என்னும் அரசனின் ஆறாவது ஆண்டில் அந்தச் சாசனம் எழுதப்பட்டது. அந்தச் சாசனத்தில், வேறு செய்திகளுடன்,

66

"திருப்பாவாடைப் புறத் திருநாமத்து காணியாகவும்

என்றும்,

“நிலம் அறுமாவரையும் திருப்பாவாடைப் புறத் திருநாமத்துக் காணியும் தில்லை நாயகன் பெரும் பண்டாரத்துக்கு முதலாகப் போனகப் படிநெல்லு அளக்கவும்

என்றும் எழுதப்பட்டிருந்தது.1