உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-18

இந்தச் சாசனத்திலிருந்து, அந்தக் காலத்திலேயே சிதம்பரம் கோவில் திருப்பாவாடைச் சிறப்புக்காக நிலம் தானம் செய்யப் பட்டிருந்தது தெரிகிறது.

அதே கோவிலில் இருக்கிற இன்னொரு சாசனம், திருப் பாவாடைச் சிறப்புக்காக நிலம் தானம் கொடுக்கப்பட்டதைக் கூறுகிறது.2 மற்றொரு சாசனமும் அதே நிலத்தைக் குறிப்பிடுகிறது.3 ஆனால், இந்தச் சாசனம், திருப்பாவாடை என்று சொல்லாமல், திருப்பாவடை என்று கூறுகிறது. இதைக் கண்டபிறகு இன்னொரு ஐயம் ஏற்பட்டது. அதாவது, பாவாடையா? அல்லது பாவடையா? இதில் எது சரியான வாசகம் என்னும் ஐயம் ஏற்பட்டது. பாவாடை என்றால் சிறுமிகள் உடுத்தும் ஆடை. பாவடை என்றால் பொருள் என்ன? பாவடை என்பது பிசகாக எழுதப்பட்ட வாசகமாக இருக்குமோ?

சிதம்பரம் கோவிலில் உள்ள இன்னொரு சாசனம் இவ்வாறு

கூறுகிறது:

66

“திருத் தைப்பூசத் திருநாளிலே திருப்பாவாடைச் சிறப்பாக அமுதுபடிக்கு ஊர் இளங்காலாலே பதின் கலனுக்குப் போனகப் பழவரிசியும் இருகல மணிப் பருப்பும் நாலுநிறை சர்க்கரையும் நூறு தேங்காயும் பத்துப் பலாக்காயும்.... இருநூறு வழுதிலைக் காயும் குலோத்துங்க சோழத் திருமடைப்பள்ளி பண்டாரத்திலே முதலிடவும். கயிலாயதேவன் திருப்பாவாடைப் புறம் என்று திருமாளிகையிலே கல்வெட்டுவித்து..."என்று எழுதப்பட்டிருக்கிறது.4

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், அரிசி, பருப்பு, சர்க்கரை, தேங்காய், பலாப்பழம் முதலியவற்றைக் கொண்டு சர்க்கரைப் பொங்கல் போன்ற திருவமுது செய்வதற்கு நிலம் தானம் செய்யப் பட்டது தெரிகிறது. ஆனால்: திருப்பாவாடைக்குப் பட்டு ஆடை வாங்குவதுபற்றி இதில் ஒன்றும் கூறப்படவில்லை. பட்டு ஆடை இல்லாமல் திருப்பாவாடைச் சிறப்பு எப்படி நடக்கும்?

ஆனால், இன்னும் ஐயம் அகலவில்லை. பாவாடைச் சிறப்பா, பாவடைச் சிறப்பா? எது சரியான வாசகம்? பாவடை என்றால் பொருள் என்ன?