உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

75

ஒரு நாள் எனக்கு ஒரு சிறு நூல் கிடைத்தது. அது 1878-ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட பழைய நூல். அந்நூலின் பெயர், “யாழ் வல்லோனாகிய நாரதமுனிக்குச் சிவபெருமான் உரைத்த ஸ்ரீரங்க மகத்துவம்” என்பது. அதில் ஸ்ரீரங்கநாதருக்கு என்னென்ன உணவு, சிற்றுண்டிகளைப் படைத்தார்கள் என்று கூறும் பகுதியில் ஒரு பட்டியல் எழுதப்பட்டிருந்தது.

66

பொங்கல், சர்க்கரைப் பொங்கல், அக்கார வடிசில், ததியோதனம், புளியவரை, மிளகவரை, கடுகவரை, தருவி சாதம் என்று சொல்லப்பட்ட முப்பத்திரண்டு வகைப் பொங்கலும், தோசை, வடை, அப்பம், எள்ளுருண்டை, அதிரசம், மனோகரம், சுகியம், தேன் குழல், கோதுமை ரொட்டி, யானையடியப்பம் முதலான கச்சாய வர்க்கங் களும்... துய்யநெய், புத்துருக்கு நெய், கற்கண்டு சீனி சருக்கரை முதலானதுகளும் சொரிந்து கமகமவென்று பரிமளிக்கும்படி திருப்பாவடையும் செய்து...'

وو

திருப்பாவடை என்னும் சொல்லைக் கண்டவுடன் என் மனம் துள்ளிக் குதித்தது. மனத்தில் புதிய எழுச்சி உண்டாயிற்று. இந்தப் பகுதியை மீண்டும் கருத்தூன்றிப் படித்தேன்.

"துய்ய நெய், புத்துருக்கு நெய், கற்கண்டு சீனி சருக்கரை முதலான துகளும் சொரிந்து கமகமவென்று பரிமளிக்கும்படி திருப் பாவடையும் செய்து” என்று எழுதப்பட்டிருப்பதைக் கண்டேன். நெடு நாளாக மனத்தில் குடிகொண்டிருந்த ஐயம் நீங்கி விட்டது. பாவாடையா, பாவடையா? எது சரியான வாசகம் என்று உள்ளத்தில் ஆராய்ந்து கொண்டிருந்த கேள்விக்கு விடை கிடைத்து விட்டது. திருப்பாவாடை அல்ல, திருப்பாவடை தான் சரியான வாசகம் என்பது விளங்கிற்று.

பேச்சுவழக்கில் திருப்பாவாடை என்று சொல்லப்படுகிறது. கல்வெட்டுச் சாசனத்திலும் திருப்பாவாடை என்றுதான் எழுதப் பட்டிருக்கிறது. ஒரு சாசனத்தில் மட்டும் திருப்பாவடை என்று எழுதப்பட்டிருந்தது. இந்த ஸ்ரீரங்க மகத்துவம் என்னும் புத்தகத்திலும் திருப்பாவடை என்றுதான் எழுதப்பட்டிருக்கிறது. திருப்பாவாடைச் சிறப்பு என்றால் அம்பிகைக்குப் பட்டுப் பாவாடை உடுத்தும் சிறப்பாக இருக்குமோ என்று நான் கருதியிருந்த கருத்துத் தவறானது என்றும், திருப்பாவடை என்பது தான் சரியான வாசகம் என்றும் திருப்பாவடை என்றால் சர்க்கரைப் பொங்கல் போன்ற இனிப்புப் பலகாரம் என்றும்