உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

செயலன்று. இந்தச் செய்யுளில் “சான்றவர்” என்றது வீரர்களை. வீரர்கள் உடல்வலி மிக்கவர்கள். வீரமும் காதலும் அவர்களின் வாழ்க்கைக் குறிக்கோள். அவர்கள் மகளிரை எண்ணி எண்ணி ஏங்குவது இயல்பு. எனவே, இங்குச் சான்றவர் என்னுஞ் சொல்லுக்கு அறிஞர் என்று பொருள் கொள்ளாமல் வீரர்கள் என்று பொருள் கொள்வதே தகுதியாகும்.

சான்றோன் என்னும் சொல்லுக்கு அறிஞன், சால்புடையவன் என்னும் பொருள் இருப்பதோடு, போர்வீரன் என்னும் பொருளும் உண்டு என்பதை இதுகாறும் ஆராய்ந்தோம். இச்சொல்லுக்கு அமைச்சன் என்னும் பொருளும் உண்டு. அதாவது அமைச்சருக்குச் சான்றோர் என்னும் பெயரும் உண்டு.

பதிற்றுப்பத்து, எட்டாம்பத்து-இரண்டாம் செய்யுளில்,

மன்பதை காப்ப அறிவு வலியுறுத்து நன்றறி யுள்ளத்துச் சான்றோர்

என்னும் அடியில் வருகிற “சான்றோர்” என்னும் சொல்லுக்குப் பழைய உரையாசிரியர், ஈண்டுச் சான்றோர் என்றது மந்திரிகளை என்று விளக்கம் கூறுகிறார். இதனால், சான்றோன் என்னும் சொல்லுக்கு அமைச்சர் என்னும் பொருளும் உண்டு என்பது தெரிகிறது.

அடிக் குறிப்புகள்

1. சான்றோன், சான்றோர் என்னும் சொற்கள் ஆண்பாலுக்கு மட்டும் வழங்கப்பட்டிருக்கிறதே யல்லாமல், இச்சொல் பெண்மகளிர் சார்பாக இலக்கியங்களில் வழங்கப்பட வில்லை.

2. தூயதன்மை -1.