உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

89

மாறியது ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளாகத்தான்.) அந்தக் காலத்தில் சேரநாட்டின் முக்கியத் துறைமுகப்பட்டினமாக இருந்தது முசிறி என்னும் பட்டினம். இது சுள்ளியாறு என்னும் பெரியாறு கடலில் கலக்கிற இடத்தில் இருந்தது. உலகப் புகழ் பெற்றிருந்த சேரநாட்டு மிளகு, அந்தக் காலத்தில் முசிறித் துறைமுகத்தின் வழியாக எகிப்து, கிரேக்கம், உரோமாபுரி முதலிய மேல்நாடுகளுக்கும், ஏனைய வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. எனவே, அக்காலத்தில் முசிறித் துறைமுகம் உலகப் புகழ்பெற்ற துறைமுகப்பட்டினமாக இருந்தது.

பெயர்.

கி.பி. முதல் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையில் யவனக் கப்பல்கள் முசிறித் துறைமுகத்துக்கு வந்து மிளகை வாங்கிக்கொண்டு போயின. யவனர் என்பது கிரேக்கருக்குப் யவனராகிய கிரேக்கர்கள் முசிறியை முசிரிஸ் என்று அழைத்தார்கள். யவனர்கள் கப்பல்களில் வந்து பொன்னைக் கொடுத்து (கறியை) மிளகை வாங்கிக் கொண்டு போனதை சங்க நூலிலும் காண்கிறோம்.

சேரலர்

சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க

யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்த கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி

என்பது அகநானூறு 149-ஆம் செய்யுள். இதில், யவனர்கள் தமது அழகிய தோணிகளில் முசிறிக்கு வந்து, பொன்னைக் கொடுத்துக் கறியை (மிளகை) வாங்கிக் கொண்டு போன செய்தி கூறப்பட்டிருப்பது காண்க.

“யவனர் தந்த வினைமாண் நன்கலம்” யவனக் கப்பல்