உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

93

எனவே, இவ்வுரையாசிரியர் கூறுகிற முரசி பட்டினம் என்பது முசிறித் துறைமுகப் பட்டினம் என்பதும், சூர்ண்ணி யாறு என்பது பேரியாறு என்பதும் ஐயமற விளங்குகின்றன. பெரியா றாகிய சூர்ண்ணி யாறு கடலில் கலக்கிற இடத்தில் இருந்து முசிறியாகிய முரசிப் பட்டினத்தின் துறையில் உண்டான முத்துக்குக் கௌர்ணேயம் என்பது பெயர்.

அப்படியானால், சூர்ண்ணி யாற்றில் உண்டான முத்து சௌர் ணேயம் என்றுதானே பெயர் பெறவேண்டும்? கௌர்ணேயம் என்று ஏன் பெயர் பெற்றது என்று கேள்வி பிறக்கிறது. நன்று. சௌர்ணேயந் தான் கௌர்ணேயமாயிற்று. இதனை விளக்குவோம்:

சூர்ணியாறு கடலில் கலக்கிற இடத்தில் உண்டானபடியால் அந்த முத்துக்குச் சூர்ணேயம் என்று பெயர் ஏற்பட்டது. பிறகு, வடமொழி இலக்கணப்படி சூர்ணேயம் சௌர்ணேயம் என்றாயிற்று. பிறகு, சௌர்ணேயம் கௌர்ணேயமாயிற்று. 'ச' கரம் 'க' கரமாக மாறிற்று. சேரம் - கேரம், சேரலன் - கேரளன் என்பதுபோல.

எனவே, சூர்ணியாற்றின் பெயர் அவ்வாற்றின் துறைமுகத்தில் உண்டான முத்துக்குப் பெயராகச் சௌர்ணேயம் என்று வழங்கிப் பின்னர் கௌர்ணேயம் என்று வழங்கினமை காண்க.

4. கலிங்கம்

பீப்லாஸ் பட்டினத்தின் பெயர் புத்தகத்தின் பெயரானது போலவும், முசிறிப் பட்டினத்தின் பெயர் மிளகுக்குப் பெயரானது போலவும், சூர்ணியாற்றின் பெயர் முத்தின் பெயரானது போலவும் கலிங்க தேசத்தின் பெயர் பருத்தி ஆடைக்குப் பெயராக அமைந்து விட்டது.

கலிங்க தேசம் ஆந்திர தேசத்துக்கு வடக்கே இருக்கிறது. இது மிகப் பழைய நாடு. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்த அசோக சக்கர வர்த்தி, கலிங்க நாட்டை வென்ற செய்தி சரித்திரத்தில் கூறப்படுகிறது. கலிங்கப் போரில் எண்ணிறந்த போர் வீரர்களும் குதிரைகளும் யானைகளும் இறந்ததைக் கண்டபோது, அசோக சக்கரவர்த்திக்கு மன இரக்கம் உண்டாகி, உயிர்க்கொலைக்குக் காரணமான போரை இனிச் செய்வதில்லை என்று முடிவு செய்தார். கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இருந்த கௌதம புத்தர் காலத்தில் எழுதப்பட்ட ஜாதகக் கதைகளிலே