உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

103

எழினி பரம்பரையைச் சேர்ந்த அரசர் பிற்காலத்திலும் இருந்தார்கள். அந்தப் பரம்பரையைச் சேர்ந்த அரசன் ஒருவன் வட ஆர்க்காடு மாவட்டம், போளூருக்கு அடுத்த திருமலை என்னும் ஊரிலே குன்றின் மேலேயுள்ள சிகாமணிநாதர் கோவிலில் இயக்கன் இயக்கியர் திருமேனியைப் புதுப்பித்தான் என்று ஒரு சாசனம் கூறுகிறது. இந்தச் சாசனம் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் எழுதப் பட்டிருக்கிறது. தமிழ்ப் பகுதி சாசனம், இந்த அரசனை எழினி என்று கூறுகிறது. சமஸ்கிருதப் பகுதிச் சாசனம் எழினியை யவனிகா என்று கூறுகிறது! அதாவது, தமிழ் எழினி சமஸ்கிருதத்தில் யவனிகா என்று அமையும் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளக்குகிறது!! இந்தச் சாசனத்தைக் கீழே தருகிறேன்.

66

"ஸ்வஸ்தி ஸ்ரீ சேர வம்சத்து அதிகமான் எழினி செய்த தர்ம யக்ஷரையும் யக்ஷியாரையும் எழுந்தருளுவித்து எறிமணியும் இட்டு கடப்பேரிக்குக் காலும் கண்டு குடுத்தான். (இது தமிழ்ப் பகுதிச் சாசனம்.)

66

وو

1

‘ஸ்ரீமத் கேரள பூப்ரிதா யவனிகா நாமனா சுதர்ம் மாத்மனா துண் டீரஹ்வய மண்டலார்ஹ ஸூகிரௌ யக்ஷேஸ்வரௌ கல்பிதௌ (இது சமஸ்கிருதப் பகுதிச் சாசனம்)

இந்தச் சாசனத்திலே தமிழ்ப் பகுதியில் வருகிற எழினி என்னுஞ் சொல் சமஸ்கிருதப் பகுதியில் யவனிகா என்று கூறப்பட்டிருப்பதைக் காண்க. இந்தச் சாசனத்தைப் பதிப்பித்த ஹல்ட்ஸ் (Dr. E. Hultzsch) அவர்கள், “திரை என்னும் பொருள் உடைய எழினி என்னும் தமிழ்ச் சொல்லின் சரியான சமஸ்கிருதச் சொல் யவனிகா என்பது” என்று விளக்கம் எழுதியிருக்கிறார். Yavanika is the Sanskrit equivalent of the Tamil Elini, 'a curtain’2 என்று அவர் எழுதியிருக்கிறார்.

எழினி என்னும் தமிழ்ச் சொல் வடமொழியில் யவனிகா என்றாயிற்று என்பதற்கு நல்லதோர் சான்றினைச் சாசனத்திலிருந்தே அறிந்தோம். எனவே, இதனை இனி ஒருவரும் மறுக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். யவன என்னும் சொல்லிலிருந்து யவனிகா என்னும் சொல் சமஸ்கிருகத்தில் உண்டாயிற்று என்று கூறுவது, மேற்போக்காகப் பார்ப்பவர்க்கு உண்மை போலத் தோன்றினாலும், ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் உண்மையில் எழினி என்னும் சொல்லே யவனிகா என்றாயிற்று என்பது பட்டப்பகல் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.