உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்றும்,

66

“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்றும் திருக்குறள் கூறுவது எவ்வளவு உண்மையாக இருக்கிறது!

சமஸ்கிருதத்திலிருந்து தமிழ்மொழி பல சொற்களைக் கடனாகக் கொண்டிருக்கிறது போலவே, சமஸ்கிருத மொழியும் தமிழ்மொழியி லிருந்து பல சொற்களைக் கடன் வாங்கியிருக்கிறது. எடுத்துக் காட்டாகச் சில சொற்களைக் கூறுவோம்:

"

நீர், அனல், யாடு (ஆடு), கான் (கானகம்), களம், தாமரை, தண்டு, பல்லி, புன்னை, மயில், மல்லிகை, கை, மகள், மாலை, மீன் என்னும் தமிழ்ச் சொற்கள் சமஸ்கிருதத்தில் சென்று முறையே நீர, அனல, ஏடக, கான்ன, கல, தாமரஸ, தண்ட, பல்லி, புன்னாக, மயூர, மல்லிகா, மஷி, மஹிளா, மாலா, மீனா என்று வழங்குகின்றன. எருமை, வெருகு (பூனை), அம்மை, முருகன், கூந்தல், காக்கை, முத்து, கைதை (தாழை), மேக (வெள்ளாடு தெலுங்கு), வரகு (அரிசி) இங்கும் இச்சொற்கள் வடமொழியில் முறையே ஹேரம்ப, பிராள, அம்பா, மூரதேவா, குந்தல, காக, முக்தா, கேதகீ, மேகெ, வருக என்று வழங்குகின்றன. இவை போன்று இன்னும் நூற்றுக்கணக்கான சொற்களைத் தமிழிலிருந்தும் வேறு திராவிட மொழிகளிலிருந்தும் சமஸ்கிருத பானஷ கடன் வாங்கியிருக்கிறது.

சமஸ்கிருத மொழி, தமிழிலிருந்து கடன் வாங்கிய சொற்களில் யவனிகா என்பதும் ஒன்று என்றும் எழினி என்னும் தமிழ்ச் சொல் வடமொழியில் யவனிகா என்று ஆயிற்று என்றும் இக்கட்டுரையில் விளக்கப்பட்டன.

அடிக் குறிப்புகள்

1. Inscription at Tirumalai near Polur. Pp. 331-332. Epigraphia Indica. Vol. VI.

2. E.I.Vol. VI. P. 331.