உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—

பதலை தபலா1

இந்துஸ்தானி இசைப் பாட்டுடன் தபலா என்னும் தோல் கருவியைப் பக்க வாத்தியமாக வாசித்து வருவதைப் பார்த்து வருகிறோம். வட இந்திய இசைப் பாட்டுகளில் தபலா முக்கிய இடம் பெற்றிருக்கிறது. தமிழ் இசைப் பாடல்களைப் பாடுவோரும், தென் இந்திய இசைப் பாட்டுகளைப் பாடுவோரும் ஆகிய கர்னாடக சங்கீதக்காரர்கள் பக்க வாத்தியமாகத் தபலாவைப் பயன்படுத்துவது இல்லை. முழவு என்னும் மிருதங்கம் உபயோகப்படுத்தப்படுகிறது. தபலா வடநாட்டு இசைக் கருவி என்றும், அதற்கும் தென்னாட்டு இசைப்பாடல்களுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்றும், நாம் எண்ணிக் கொண்டிருக் கிறோம். தபலா தென்னாட்டு இசைக்குத் தொடர்பில்லாத வடநாட்டு இசைக்கு உரிய கருவி என்று கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை இது அன்று. தபலா தமிழ்நாட்டு இசைக்கருவியாக ஒரு காலத்தில் இருந்தது!

தமிழ்நாட்டிலே, ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னே, கடைச்சங்க காலத்திலே தபலா என்னும் இசைக்கருவி வாசிக்கப்பட்டது என்று சொன்னால் நீங்கள் வியப்படைவீர்கள்.

தபலா என்னும் பெயரே தமிழ்ச் சொல்லின் திரிபு. பதலை என்னும் தமிழ்ப்பெயர் தபலா என்று திரிந்து வழங்குகிறது. மதுரையை “மருதை” என்றும், குதிரையைக் “குருதை” என்றும், சிலர் திரித்து வழங்குகிறார்கள் அல்லவா? அப்படித்தான் பதலை என்னும் தமிழ்ப் பெயரை மாற்றித் தபலா என்று வழங்குகிறார்கள். பதலை என்பது சங்க காலத்தில் வாசிக்கப்பட்ட ஒரு இசைக்கருவி (தோல் கருவி)க்குப் பெயராக வழங்கப்பட்டது.

சங்க காலத்திலே பாணர் என்று தமிழரில் ஒரு இனத்தார் இருந்தார்கள். ஆடல், பாடல், நாடகம் – என்னும் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்துவது அவர்கள் தொழில். பாணருடைய பெண்மக்களும் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். பாணருடைய பெண்களுக்குப் பாடினி என்றும் விறலி என்றும் பெயர். பாணர் குடும்பமே இசை நாடகங்களில் தேர்ச்சி பெற்றிருந்தது. பாணர்கள் குடும்பத்தோடு ஊர்