உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூனி

கூன் என்றால் வளைவு என்பது பொருள். முதுகு வளைந்த அங்கவீனர்களைக் கூனன், கூனி என்று கூறுகிறோம். கூனி என்று முதுகு வளைந்த மகளுக்குப் பெயர் கூறுவது மட்டுமில்லாமல், கூனி என்னும் சொல் ஊழியப் பெயராகவும் வழங்கப்படுகிறது. ஊழியப் பெண் என்னும் பொருளில் இச்சொல் பழைய இலக்கியங்களில் வழங்கப்பட்டுள்ளது.

ஆடற்கலையில் பேர்போன மாதவி சோழ அரசன் முன்னிலையில் அரங்கேறித் தன் கலைத் தேர்ச்சியைக் காட்டிச் சோழனிடமிருந்து தலைக்கோலிப் பட்டத்தையும் ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் மாலையும் பரிசாகப் பெற்றபோது, அந்தப் பொன் மாலையை விற்பதற்குத் தன் ஊழியப் பெண்ணாகிய கூனி கையிற் கொடுத்து அனுப்பினாள் என்றும், அந்த மாலையை வாங்கிய கோவலன் அக்கூனியுடன் மாதவியின் வீட்டுக்குச் சென்றான் என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது.

'மாலை வாங்குநர் சாலுநங் கொடிக்கென

மானமர் நோக்கியோர் கூனிகைக் கொடுத்து’

‘கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு மணமலை புக்கு'

(சிலம்பு. 3: 166-67)

(சிலம்பு. 3 : 171-72)

இதில் ஊழியப் பெண் கூனி என்று கூறப்பட்டது காண்க.

மதுராபதி என்னும் அரசகுமாரியின் ஊழியப் பெண்ணின் பெயர் அயிராபதி. அவள் கூனி என்று 'பெருங்கதை' என்னும் காவியத்தில் கூறப்படுகிறாள்.

'அயிராபதி யெனும் செயிர்தீர் கூனியை’

(பெருங்கதை, மகதகாண்டம், 8 : 55)

'அயிரா பதியெனும் அம்மனைத் தோளி மானேர் நோக்கிற் கூனி.'

(பெருங்கதை, வத்வகாண்டம். 12 : 77-78)