உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

137

காயசண்டிகை என்பவளுக்கு யானைத்தீ நோய் உண்டாயிற்று என்று மணிமேகலை என்னும் காவியம் கூறுகிறது. யானைத் தீ நோயினால் காயசண்டிகை, பசி நோய் தணியாமல் அலைந்து திரிந்தாள். அக்காலத்தில் மணிமேகலைக்கு அமுதசுரபி என்னும் உணவுப் பாத்திரம் கிடைத்தது, அதிலிருந்து உணவை எடுத்து ஏழை எளியவருக்குக் கொடுத்துப் பசியாற்றி வந்தாள். இதனையறிந்த காயசண்டிகை, மணி மேகலையிடஞ் சென்று உணவு கேட்டாள். மணிமேகலை, அமுத சுரபியிலிருந்து உணவை அள்ளி அள்ளிக் கொடுக்கக் காயசண்டிகை அதனை உண்டு நோய் நீங்கி

மணிமேகலையை வணங்கினாள்.

யானைத் தீநோய் அகவயிற் றடக்கிய

காயசண் டிகையெனும் காரிகை வணங்கி நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி அடலரு முந்நீர் அடைத்த ஞான்று

குரங்குகொணர்ந் தெறிந்த நெடுமலை யெல்லாம் அணங்குடை யளக்கர் வயிறு புக்காங்கு

இட்டது ஆற்றாக் கட்டழல் கடும்பசிப்

பட்டேன் என்றன் பழவினைப் பயத்தால் அன்னை கேள்நீ, ஆருயிர் மருத்துவி! துன்னிய என்னோய் துடைப்பாய் என்றலும் எடுத்த பாத்திரத் தேந்திய அமுதம்

பிடித்தவள் கையில் பேணினள் பெய்தலும் வயிறுகாய் பெரும்பசி நீங்கி மற்றவள் துயரம் நீங்கித் தொழுதனள்.

(மணிமேகலை - 17 : வரி 7-20)

சீவகசிந்தாமணி என்னும் காவியத்திலும் யானைத் தீநோய் கூறப்படுகிறது. அச்சநந்தி என்னும் முனிவருக்கு யானைத்தீ என்னும் நோய் உண்டாகி, பசியினால் அவர் பலகாலம் வருந்தினார். பிறகு ஒருநாள் கந்துகன் என்னும் செல்வன் வீட்டுக்குச் சென்று உணவு கேட்க, கந்துகனும் அவன் மனைவி சுநந்தையும் அவரை வரவேற்று, அமிர்தம் போன்ற உணவை வேண்டிய அளவு கொடுத்தார்கள். யானைத்தீநோய் கொண்ட முனிவர் "பெய் பெய்” என்று கூற அவர்கள் நிறைய அன்னம் அளித்தார்கள். முனிவர் அதனை உண்டு, நோய் நீங்கினார். இதனைச் சீவகசிந்தாமணி இவ்வாறு கூறுகிறது.