உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

தேரை, பல்லி

விளாம்பழத்துக்கு உண்டாகும் நோய்க்குப் பெயர்: என்னும் பெயர் போல.

வெஞ்சின வேழ முண்ட விளங்கனி போன்று நீங்கி எஞ்சினான் போல நின்றான்

என்பது சிந்தாமணி, குணமாலையார் இலம்பகம், 272-ஆம் செய்யுளடி.

66

'களிறுண்ட விளங்கனிபோன்று வெறுவிதாக அறிவு முதலிய நீங்கி இறந்தான்போல நின்றான்” என்பது நச்சினார்க்கினியர் உரை. தூம்புடை நெடுங்கை வேழம் துற்றிய வெள்ளிலே போல

-

என்பது நாமகள் இலம்பகம், 203-ஆம் செய்யுளடி. இதற்கு, "வேழம் - வெள்ளிலுக்கு வருவதொரு நோய்" என்று நச்சினார்க்கினியர் உரை எழுதுகிறார்.

வெஞ்சின வேழமுண்ட வெள்ளிலின் வெறிய மாக நெஞ்சமு நிறையு நீல நெடுங்கணாற் கவர்ந்த கள்வி.

என்பது குணமாலையார் இலம்பகம், 174-ஆம் செய்யுளடி. இதில், குணமாலை என்பவள் தன் பார்வையினால் சீவகனுடைய மனத்தைக் கவர்ந்த செய்தி கூறப்படுகிறது. இதற்கு நச்சினார்க்கினியர் உரை வருமாறு : கொடிய வேழமென்னும் நோயுடை விளாம்பழம் போலே வெறுவிபோம்படி நெஞ்சையும் நிறையையும் பிறரறியாமற் கண்ணினாற் கவர்ந்த கள்வி. இவ்வாறு உரை எழுதிய பிறகு, “வேழம் (யானை), தேரை போயிற் றென்றாற் போல்வதொரு நோயென்க” என்று விளக்கம் கூறுகிறார். (வெள்ளில் என்பது விளாம்பழம்)

இதனால், யானை என்பது விளாம்பழத்துக்குத் தோன்றும் நோய் என்பது விளங்குகிறது.

3-a யானைத்தீ

யானைத்தீ என்னும் நோய் மனிதருக்கு உண்டாகுமாம். இந் நோய் கொண்டவருக்குப் பசி கடுமையாக இருக்குமாம். எவ்வளவு உணவு உட்கொண்டாலும் பசி தணியாமல், மேன்மேலும் பசியினால் வருந்துவார்களாம். தமிழ் இலக்கிய நூல்களிலே இந்த யானைத்தீ நோய் கூறப்படுகிறது.