உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

135

என்பது முத்தொள்ளாயிரச் செய்யுள். இதில், தேங்காய்க்கு நோய் உண்டாகத் தேரைக்குப் பழி ஏற்பட்டது என்னும் கருத்துக் காணப் படுவது காண்க.

2. பல்லி ஓடிய பயிர்

நெற்பயிருக்கும் சில நோய்கள் உண்டாவது உண்டு. அந் நோய்களில் பல்லி என்பதும் ஒன்று. பல்லி ஒடிய பயிர் என்று கூறுவார்கள். பல்லி என்னும் பிராணி கௌளி என்னும் பிராணியின் இனத்தைச் சேர்ந்தது. இந்தப் பல்லி பயிரில் ஓடுவதனால், பயிருக்கு அந்த நோய் உண்டாவதில்லை. ஆனால் எக்காரணத்தினாலோ பல்லி ஓடிய பயிர் என்று கூறுகிறார்கள். பல்லி என்னும் நோய் கொண்ட பயிர் விளைச்சல் காணாது.

66

“குடிக்குச் சகுனி பயிருக்குப் பல்லி'

என்னும் பழமொழியும் வழங்கப்படுகிறது. துரியோதனனுடைய குடியைச் சகுனி என்பவன் கெடுத்ததுபோல, பல்லி என்னும் நோய் பயிரைக் கெடுக்கும் என்பது இதன் கருத்து.

ஆனால், பயிருக்குத் தோன்றும் பல்லி என்னும் நோய்க்கும், பல்லி என்னும் பிராணிக்கும் யாது சம்பந்தம்? பாவம், பல்லியின் மேல் ஏன் பழி சுமத்தப்படுகிறது?

3. யானையுண்ட விளங்கனி

உருண்டு திரண்டுள்ள விளாம்பழம் மணமுள்ளது. சில விளாங் கனிகளின் உள்ளே சதைப்பற்று இல்லாமல் வெறும் ஓடுமட்டும் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். உள்ளே சதை இல்லாமல் வெறும் ஓடு மட்டும் உள்ள விளாங்கனிக்கு யானையுண்ட விளாங்கனி என்பது பெயர். அதாவது, யானை என்னும் நோய்கொண்ட விளாங்கனி என்பது பொருள்.

து

யானையுண்ட விளாங்கனி என்பதற்குச் சிலர் தவறாகப் பொருள் கூறுகிறார்கள். யானை விளாம்பழத்தைக் கடித்து மெல்லாமல் விழுங்கிவிடுமாம். விழுங்கப்பட்ட விளாம்பழத்தின் சதை மட்டும் சமிக்கப்பட்டு, ஓடு மட்டும் விளாங்காய் உருவத்துடன் சாணத்துடன் வெளிப்படும் என்று சிலர் கூறுகிறார்கள். இது தவறு. யானை என்பது