உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

"காக்கை பிடிக்கிறான்” என்று உலக வழக்கில் சொல்லு கிறார்கள் அல்லவா? ஒருவருக்கு யாருடைய உதவியாவது வேண்டியிருந்தால், அவரிடம் அளவுக்கு மிஞ்சி மரியாதை செய்வதும், அவர் விருப்பம்போல் நடப்பதும் வழக்கம் அல்லவா? அப்படிப்பட்டவரைப் பார்த்து, "காக்கை பிடிக்கிறார்" என்று கூறுகிறார்கள் அன்றோ? காக்கைக்கும் இவர் செயலுக்கும் என்ன பொருத்தம்? காலைக் கையைப்பிடிக்கிறார் என்பதுதான் கால்-கை பிடித்தல் என்பது மருவி, கடைசியில் “காக்கை பிடித்தல்” என்று மாறிவிட்டது!

சில செடிகளின் பெயர்கள், சில பிராணிகளின் பெயராக அமைந் திருக்கின்றன. நாய்வேளை, நாய்கடுகு, நாயுருவி, நரி வெங்காயம், நத்தைச்சூரி, பசுமுன்னை, எருமை முன்னை, யானைத்திப்பிலி, யானை நெருஞ்சி, யானைக் குன்றிமணி, கோருயவரை, பூனைக்காலி விதை, பேய்க்கரும்பு, பேய்ச்சுரை, பேயத்தி முதலிய பெயர்களைக் காண்க. இந்தச் செடிகளுக்கும் இந்தப் பிராணிகளுக்கும் என்ன சம்பந்தம்?

அடிக் குறிப்புகள்

1. அந்தணர் தொழிலேன் ஆனேன் - அழகிய தண்ணளியையுடைய முனிவர் அமைதியடைந்திருத்தல் போலஅமைதி யடைந்தேன். அதாவது, யானைத்தீ நோய் நீங்கிச் சாந்தியடைந்தேன் என்பது.