உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

111

அவர்களுடைய கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கும் சில செய்திகளே ஈண்டு எழுதப்படுகின்றன.

சடையவர்மன் சுந்தரபாண்டியன்

இவன் மாறவர்மன் குலசேகர பாண்டியனுக்கு என்ன முறையினன் என்பது தெரியவில்லை. இவன் கி. பி. 1276 முதல் 1293 வரையில் கொங்குநாட்டில் அரசப்பிரதிநிதியாயிருந்து ஆட்சி புரிந்தவன். இவனுக்குத் தலைநகராயிருந்தது, கொங்கு நாட்டுக் கருவூராகும். இவன் கல்வெட்டுக்கள் சேலம், கடப்பை, தென்னார்க்காடு ஜில்லாக்களில் காணப்படுகின்றன. மாறவர்மன் விக்கிரமபாண்டியன்

3

1

இவன் மாறவர்மன் குலசேகர பாண்டியனுக்குத் தம்பி யாவன். இச்செய்தி திருவெண்ணெய் நல்லூரிலுள்ள ஒரு கல்வெட்டால்' அறியப்படுகின்றது. இவன் தைத்திங்கள் அத்தநாளில் பிறந்தவன். இவன் கல்வெட்டுக்கள் செங்கற்பட்டு, தென்னார்க்காடு ஜில்லாக்களில் மிகுதியாகக் காணப் படுகின்றன. எனவே, மாறவர்மன் குலசேகரன் ஆட்சிக் காலத்தில், இவன் நடுநாடு தொண்டை நாடுகளில் அரசப் பிரதிநிதியாயிருந்தவன் ஆவன். இவன் கி. பி. 1268 முதல் கி. பி. 1281 வரையில் அரசாண்டவன் என்று தெரிகிறது. இவன் கல்வெட்டுக்களில் 'திருமகள் ஜயமகள்' எனவும், திருமலர் மாது' எனவும் தொடங்கும் இரண்டு மெய்க்கீர்த்திகள் உள்ளன. இவன் சிவன் கோயில்களிலும் திருமால் கோட்டங்களிலும் அமண்பள்ளியிலும் இராசாக்கள் நாயன் என்னும் பெயரால் நாள் வழிபாடும் திருவிழாவும் நடத்துவதற்கு 5 இறையிலி நிலங்கள் யாண்டும் அளித்திருத் தலை நோக்குங்கால், இவனுக்கு இராசாக்கள் நாயன் 1. The Pandyan Kingdom. p. 184.

2. Ins. 462 of 1921.

4

3.இவன் தென்னார்க்காடு ஜில்லாவில் திருநறுங்கொண்டை யிலுள்ள

நாற்பத்தெண்ணாயிரப் பெரும்பள்ளி என்னும் அமண் பள்ளியில், தான் பிறந்த தைத்திங்கள் அத்தநாளில் இராசாக்கணாயன் திருநாள் நடத்துவதற்கு இறையிலி நிலம் அளித்தித்ருத்தலால் இதனை நன்கறியலாம். (S. I. I., Vol. VII. No. 1014)

4. Ins. Nos. 539 and 704 of 1916.

5. S. I. I., Vol. VII. No. 795, 916, 1018 and 1023.