உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

47

தேவ:

காபாலி:

தேவ:

காபாலி:

பானங்களைப் பருகவும், ஐந்து வகை நறுமணமுள்ள தாம்பூலங்களைத் தரிக்கவும், மெல்லிய ஆடைகளை யுடுக்கவும் அவர் அனுமதித்துள்ளார். ஆனால், பெண் மகளிரையும் மதுபானங்களையும், கூடாது என்று அவர் ஏன் விலக்கி வைத்தார்? எல்லாம் அறிந்த பகவான் இவை இரண்டையும் தள்ளிவைத்திருப் பாரா? என்போன்ற வாலிப பிக்குகளிடத்தில் பொறாமையும் வெறுப்புங் கொண்ட அந்தக் கிழ பிக்குகள், பெண்ணையும் கள்ளையும் உபயோகிக் கலாம் என்று பகவான் எழுதி வைத்ததை, மறைத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். மாற்றி எழுதப் படாத, திரிபிடகத்தின் மூல நூல் எங்கே கிடைக்கும்! அப்படிப்பட்ட நூல் ஒன்று கிடைக்குமானால், புத்தருடைய முழு போதனையையும் உலகத்துக்கு வெளிப்படுத்தி பௌத்த சங்கத்துக்கு நன்மையுண் டாக்குவேன்.

(நடந்து செல்கிறான்)

அதோபார் ஐயா! சிவந்த ஆடை போர்த்துக் கொண்டு, உடம்பை அடக்கி ஒடுக்கி, நல்லவர்கள் நிறைந்த இந்த தெருவிலே, வலப்பக்கமும் இடப்பக்கமும் பார்த்துக் கொண்டு பயந்தவன்போல அந்த ஆள் வேகமாக நடக்கிறான்.

ஆமாம்! ஆமாம்! அவன் கையில் எதையோ வைத்துக்

மேலாடையினால்

கொண்டிருக்கிறான்.

மறைத்து

அப்படியானால் அவனைப்பிடித்து நிறுத்தி, என்ன வைத்திருக்கிறான் என்பதைப் பார்த்து விடுவோம்.

அப்படித்தான் செய்வோம். (வேகமாக நடந்து போய்) ஓய்! பௌத்த சந்நியாசி, நில் அங்கே.

பௌத்த பிக்கு: யார் என்னை இவ்வாறு அழைப்பது (நின்று திரும்பிப் பார்த்து) ஓ! ஏகம்பத்தில்" வசிக்கிற அந்தப் போக்கிரிக்

காபாலிகன்! நல்லது, நான் இந்தக் குடிகாரப்பயலின்