உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற்பதிப்பின் முன்னுரை

நாகரிகம் பெற்று நல்வாழ்வு வாழும் மக்கட் குழுவினர் எல்லோரும் தமக்கென்று தனிக் கலைகளைப் பெற்றுள்ளனர். பண்டைக் காலந்தொட்டு நாகரிகமாக வாழ்ந்துவருகிற தமிழராகிய நமக்கும் தனிக் கலைகள் உள்ளன. நமது மூதாதையர் தொன்றுதொட்டுப் போற்றி வளர்த்த கலைச்செல்வங் கள். நமக்கு நிறையக் கிடைத்துள்ளன. நமக்குக் கிடைத்துள்ள கலைச் செல்வங்களுள் சிற்பக் கலையும் ஒன்று. இக்கலை, பல நூற்றாண்டு களுக்கு முன்னரே நமது நாட்டில் தோன்றி, வழிவழியே வளர்ந்து. பல்லவர் காலத்தில் உயர்வடைந்து, சோழர் காலத்தில்

சிறப்புற்றிருந்தது.

நமது நாட்டுச் சிற்பக் கலை, பெரும்பாலும் சமயத் தொடர்புடையது. சைவம், வைணவம், பௌத்தம், சமணம் என்னும் நான்கு சமயச் சார்புடைய சிற்ப உருவங்கள் நமது நாட்டில் காணப்படுகின்றன. இந்நூலில் ஆராய்வது சைவத் தொடர்புடைய சிற்பங்களையே; அதிலும் ஓர் உட்பிரிவாகிய நடராசத் திருவுருவத்தைப் பற்றியே. அதாவது, சிவபெருமான் செய்தருளும் ஐந்தொழில் தாண்டவ மூர்த்தங்களை மட்டுமே.

தமிழ்நாட்டில் உள்ள சிற்ப உருவங்களாகிய கலைச் செல்வங்களை காணும்போது தமிழன் இறுமாந்து நிற்கிறான். சிற்பக் கலையுருவங் களில் தமிழனுக்குத் தனிச் சிறப்பையும் தனிப் பெருமையையும் அளிப்பன தாண்டவத் திருவுருவங்கள். தமிழகத்திலே, தமிழனுடைய பண்பட்ட உள்ளத்தில் ஊறி வெளிப்பட்டதுதான் கலையழகு நிறையப் பெற்ற தாண்டவத் திருவுருவம். தமிழன் கற்பித்தமைத்த, கண்ணையும் கருத்தையும் கவர்கிற நடராசத் திருவுருவம் இல்லாத சைவக் கோயில்களும் உளவோ? அம்பலவாணனின் அழகிய உருவம் இல்லாத கோயில்கள் தமிழ் நாட்டில் இல்லை என்றே கூறலாம்.

வடநாட்டுக் கோயில்களில் நடராசத் திருவுருவத்தைக் காண்பது அரிது. இப்போதுதான், நமது நாட்டுக் கோயில்களைப் பின்பற்றி வட நாட்டிலே சிற்சில இடங்களில் நடராசத் திருவுருவம் அமைக்கப்