உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

65

படுகிறது. தாண்டவத் திருவுருவத்தின் கலையழகு மேல்நாட்டுக் கலைஞரின் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டதென்றால், ஏனைய கீழ் நாட்டுக் கலைஞரின் கருத்தையும் கவராதிருக்குமோ?

தமிழர் போற்றி வளர்த்த அழகுக் கலைகளின் இயல்பை அறிய வேண்டும் என்று எண்ணி முதலில் சிற்பக் கலையை ஆராயப் புகுந்தேன். புகுந்து முதலாவதாக,தமிழன் உள்ளத்தில் அரும்பி உருவடைந்து வெளிப்பட்ட- தமிழனுக்குத் தனிச் சிறப்பாக உள்ள - நடராச சிற்பத்தை ஆராய்ச்சி செய்யத் தொடங்கினேன். தமிழனாகப் பிறந்து தமிழனாக வாழ்கிறபடியால், தமிழர் வளர்த்த கலைப்பண்புகளை அறிய வேண்டிய பிறப்புரிமை

தொடங்கினேன்.

காரணமாக இதனை ஆராயத்

இந்தச் சிற்பக் கலை ஆராய்ச்சியில் இறங்கிய பிறகு ஐயங்களும் குழப்பங்களும் மனத்தில் மூண்டன. படைத்தல்,காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐஞ்செயலைத்தானே தாண்டவப் பெருமான் செய்கிறார்? ஆகவே, தாண்டவமும் ஐந்தாகத்தானே இருக்க வேண்டும்! ஏழுவகைத் தாண்டவம் என்று நூல்கள் கூறுகின்றனவே? ஐந்து எப்படி ஏழாயிற்று? ஏழு தாண்டவ உருவங்களில் எல்லோரும் அறிந்திருப்பது ஆனந்த நடனம் என்னும் நடராசமூர்த்தம் ஒன்று தானே? ஏனைய தாண்டவ உருவங்கள் எவை? அவை உள்ளனவா? எங்கே உள்ளன? அவற்றின் பெயர் என்ன? இயற்கைக்கு மாறாக நான்கு, எட்டு, பத்து, பன்னிரண்டு, பதினாறு கைகள் இருப்பது ஏன்? பாம்பு,நெருப்பு, துடி, சூலம், பாசம், மணி முதலியவற்றைக் கைகளில் ஏந்தியிருப்பதன் கருத்து யாது? வைபோன்ற வினாக்கள் உள்ளத்தில் தோன்றி ஐயங்களை உண்டாக்கின.

இவ்வினாக்களுக்கு விடை காணப் புராணங்கள் துணை புரிய வில்லையாக, சாத்திரம் கற்ற சித்தாந்தச் சைவர்களை அணுகினேன். எனது வினாக்கள் அவர்களுக்கும் ஐயத்தை உண்டாக்கி அவர்கள் மனத்தை யும் குழப்பின. அவர்கள் எனது வினாக்களுக்கு விடை கொடுக்காத படியால், தெளிவுகாணும் வழியைச் சிந்தித்தேன். பிறகுதான் உண்மை விளங்கிற்று. இக்கலை ஆராய்ச்சிக்கு வெறும் சித்தாந்த சாத்திரங்களை மட்டும் கற்பது போதாது; தத்துவக் கருத்துக்களைக் கூறுகிற தந்திர நூல்களாகிய ஆகமங்களையும் கற்கவேண்டும்; இவற்றோடு சிற்பக்