உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

கலையின் இயல்பினையும் அறியவேண்டும் என்னும் உண்மை விளங்கிற்று. ஏனென்றால், சித்தாந்தக் கருத்தும் ஆகமக் கருத்தும் ஒன்றுசேர்ந்து அமைந்ததுதான் நமது சிற்பக் கலைகள். எனவே, எனது ஐயங்களுக்கு விடை கண்டு நான் தெளிவு பெறவேண்டுமானால், சித்தாந்த நூல், ஆகமநூல், சிற்பநூல் மூன்றையும் ஒருக்கே கற்றவர்களைக் கேட்கவேண்டும் என்னும் உண்மை விளங்கிற்று.

இவற்றையெல்லாம் ஒருங்கே கற்றவரைக் கிடைக்கப் பெறாமலும், மேற்கொண்ட முயற்சியை விட்டுவிட மனமில்லாமலும், ஆசிரியன் இல்லாத மாணவனைப் போல, தன்னந்தனியே, கிடைத்த நூல்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்ய வேண்டியதாயிற்று. எனது சிற்றறிவிற்கும் சிறிய ஆற்றலுக்கும் எட்டியவரையில் ஆராய்ந்து கண்ட முடிவுதான் இச்சிறுநூல், குற்றங்குறைகள் இதில் இருக்கும் என்பதில் ஐயமில்லை. கற்றறிந்தோர் இதில் காணும் குற்றங் குறைகளைத் தெளிவுபடுத்துவ ராயின். ஆக்க வேலைக்கு உதவி செய்தவராவர்.

தமிழ்ப் பெரியார் திருவாளர் திரு.வி.க அவர்கள் காவிய ஓ வியங்களைப் போற்றவேண்டும் என்னும் கருத்துள்ளவர்கள் என்பதைத் தமிழுலகம் நன்கறியும். கலை ஆராய்ச்சியாகிய இந்நூலுக்கு ஓர் அணிந்துரை வழங்க வேண்டுமென்று அப்பெரியாரைக் கேட்டுக்கொண்டேன். உடல் நலம் குன்றியிருக்கிற

நிலையிலும், அவர்கள் மனமுவந்து ஓர் அணிந்துரை எழுதியருளினார்கள். அவர்களுக்கு எனது மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது மூதாதையரால் வளர்க்கப்பட்ட, பெருமையுடன் போற்றப் பட வேண்டிய இக்கலைச்செல்வங்கள், இக்காலத்தில், போற்றப்படாமல் புறக்கணிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும், மறக்கப்பட்டும் இருட்டறை களில் கிடக்கின்றன. நம்மவர்களை ஊக்கப்படுத்தி, இக்கலைகளை ஆராயவும், இவற்றின் பண்பை உணரவும், போற்றிப் பாதுகாக்கவும் தூண்டுகோலாக இந்நூல் உதவுமானால், அதுவே இந்நூலை எழுதியதனால் நான் பெற்ற பயனாகும்.

6

இந்நூலை எழுதியபோது, உயர்திரு விபுலாநந்த அடிகள் நினைவு மலராக இது வெளிவரும் என்று நான் கனவிலும் கருதவில்லை. அழிந்து மறையும் நிலையில் இருந்த பண்டைக் காலத்து இசைத்தமிழ் நாடகத்தமிழ் என்னும் கலைச் செல்வங்களை அழிந்துபடாமல் உயிர்ப்