உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றி எல்லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றி எல்லாஉயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றி எல்லாஉயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

போற்றி மால்நான்முகனும் காணாத புண்டரிகம் போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள் போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்!11

என்பது மாணிக்கவாசகர் திருவாக்கு.

இச்செய்யுளுக்கு மதுரைச் சிவப்பிரகாசர் இவ்வாறு விளக்கம்

கூறுகிறார்:

66

'இதனுள், தோற்றமாம் பொற்பாதம் என்பது சிருஷ்டி என அறிக. போகமாம் பூங்கழல்கள் என்பது திதி என அறிக. ஈறாம் இணையடிகள் என்பது சங்காரமென அறிக. மால், நான்முகனும் காணாத புண்டரிகம் என்பது திரோபவம் என அறிக. யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன் மலர்கள் என்பது அனுக்கிரகமென அறிக. ஆக, ஐந்து கிருத்தியத்திற்கும் இங்ஙனம் கண்டுகொள்க. அன்றியும், கர்த்தா இந்தத் தொழில்களிலே ஆன்மாக்களைக் கூட்டிப் பஞ்சகிருத்தியப்படுத்துமிடத்துப்பாராமலெளிதாக, விளையாட்டாகச் செய்வனென்றும், அப்படிச் செய்யவே ஆன்மாக்களுக் குண்டான மலபரிபாகம் வந்து திருவடிக்கு உரித்தாவார்கள் என்பது

மேலும், கீழ்வருமாறு நன்கு விளக்குகிறார்:

66

9912

'ஆன்மாக்களை ஜனனக் கடலிலே நின்றும் கரையேற்றித் தனது திருவடியிலே கூட்டிக் கொள்ளுகை நிமித்தமாகக் கர்த்தா இந்தக் தொழிலைச் செய்வார்.”13

"நின்மல சொரூபமாயிருக்கப்பட்ட பரசிவமானது ஆன்மாக் களுக்குண்டான ஜன்னமரண துக்கத்தை நீக்குகைப் பொருட்டாகத் திருவம்பலத்தின் கண்ணே நின்று திருநடனம் செய்தருளுகின்றது.

66

9914

“அப்படிச் சிவன் பஞ்சகிருத்தியம் செய்யவே ஆன்மாக்களுக்கு மலபரிபாகம் வந்து முத்தியைப் பெறுவார்கள்.

9915