உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

79

தத்துவப் பிரகாசம் என்னும் நூல் நூல் இதனை வ்வாறு விளக்குகிறது.

"படைப்பானேன்? சுத்த அறியாமை போக்குதற்காம்;

பலயோனி வளர்ப்பானேன்? வினைப்பான்மை அறிய;

துடைப்பானேன்? பிறந்துழன்ற இளைப்பு மாற;

தோன்றாமல் ஆக்குவதேன்? தொடர்ச்சி தொல்லளவாம் எடுத்தணைப்பதென்? நேரே கருணை கண்டாய்

இவையோ தானெனின் அதற்கே இசையச் செய்யும் படித்தனவால் கருணைவழிப் பால வாகும்

பாரமோஎனில் பரைக்கும் இறைக்கும் நடுப்பணியே

இதன் உரை:

9916

“கருணையாலே சிவன் பஞ்ச கிருத்தியம் செய்யின் ஆன்மாக்களை மாயாவுடலிலே இடவேண்டுவானேன் என்று வினவினால், அவ் விடத்து ஆன்மாக்களுக்கு அறியாமையாகிய மலம் நீக்குதல் காரண மாகவாம். ஆன்மாக்களைத் திதி செய்யவேண்டுவானேன் என்ற விடத்து,அவரவர் செய்தவினை துய்ப்பித்து நீக்குதற்காம். சங்காரம் பண்ணுவது எந்தக் கருணை என்று வினவியவிடத்து, மாயையினாலே மொத்துண்டு திரியும் இளைப்புமாறவைப்பதாம். திரோதானம் செய்வானே னென்றவிடத்து, இப்படிப் போதுந் தொடர்ச்சியில் வினை தொலையுமளவும் செய்த காவலாம். அனுக்கிரகம் ஏதென்னின் நேரே அருள் செய்து திருவடி வைப்பதாம். இந்த நாலு கன்மமும் கருணை யானபடி; கன்மந் தொலைக்கை திருவருட்டிட மாதலால், அது கருணை யின் பகுதியேயா மாதலாலே செய்கின்றதாம். இப்படி கிருத்தியம் செய்யுமளவில் விகாரப்படுகின்றனோவென்று வினவினால், அந்த விகாரம் பரமாகிய பராசக்திக்கும் சிவனுக்கும் நடுநிகழ்ச்சியாகும் தொழிலாம் என்பது தத்துவப் பிரகாசம்.'

இதுகாறும் பஞ்சகிருத்தியம் என்னும் ஐந்தொழிலின் கருத்து விளக்கிக் கூறப்பட்டது. அதாவது, உயிர்களிடத்தில் படிந்துள்ள அழுக்கைப் போக்கித் தூய்மைப்படுத்திப் பேரின்பத்தைக் கொடுப்பதற் காகக் கடவுள் ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் (சிருஷ்டி, ஸ்திதி, சங்காரம், திரோபவம், அனுக்கிரகம்) என்னும் ஐந்தொழிலைச் செய்கிறார் என்பது.