உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

/ 83

எனவே, பொருள்களின் இயற்கை உருவத்தை அப்படியே காட்டுவது அயல்நாட்டுச் சிற்பக் கலையின் நோக்கம்; உணர்ச்சிகளை யும் கருத்துகளையும் உருவங்களின் மூலமாக வெளிப்படுத்துவது நமது நாட்டுச் சிற்பக் கலையின் நோக்கம் என்னும் உண்மையை மறவாமல் மனத்திற் கொண்டு மேலே செல்லுவோம்.

மறைபொருள் தத்துவம்

தாண்டவச் சிற்ப உருவத்திலே மறைபொருளின் கருத்துகள் பல புகுத்தப்பட்டிருக்கின்றன. பல தத்துவக் கருத்துகள் இச்சிற்பங்களில் புகுத்தி வைக்கப்பட்டுள்ன. ஆனால், சிற்ப உருவங்களில் காணப் படுகிற குறிகளின் (அடையாளங்களின்) கருத்து இன்னதென்று பெரும் பான்மையோர் அறிந்துகொள்ளவில்லை. தத்துவக் கருத்தின் உண்மைப் பொருளை உணர்ந்தோர் இந்த மறைபொருள் தத்துவத்தை மற்றவர்களுக்கு விளங்கச் சொல்லாமல் மறைத்துவைக்கிறார்கள். இவற்றைப் பாமர மக்களுக்குச் சொல்வது 'பாவம்' என்றும் கருதுகிறார் கள். ஆகவே, தத்துவத்திற்கு விளக்கம் கூற அவர்களை எதிர்பார்ப்பது வீண்வேலையே. தத்துவப் பொருள்களின் திறவுகோலைத் தேடிக் கண்டுபிடித்து, அதன் உதவியினால் இச்சிற்பக் கலையில் பொதிந்துள்ள உட்கருத்துகளை நாமே கண்டறிவோம். தத்துவத்தின் உண்மைப் பொருளை விளக்கும் குறிப்புகள் வெவ்வேறு நூல்களில் வெவ்வேறிடங்களில் சிதறிக் கிடக்கின்றன. அவற்றை ஒருங்கே திரட்டி ஈண்டுத் தருகிறோம்.

திருமேனி

உருவம் இல்லாத கடவுளுக்குப் பெரியோர் உருவத்தைக் கற்பித்தார்கள். உலகத்திலே யுள்ள பிராணிகள் எல்லாவற்றிலும் மனிதன்மட்டுமே ஆறறிவு படைத்து அழகான உடலமைப்பைப் பெற்றிருக்கிறான். ஆகையினாலே, கடவுளுக்கு உருவம் கற்பித்த போது அவருக்கு மனித உருவத்தையே கற்பித்தார்கள் உண்மையில் கடவுள், உருவம் அற்றவராய் ஆகாசத்தோடு ஆகாசமாய்ப் பரந்திருக்கிறார். ‘ஆகாசமாம் உடல்' என்பது திருமந்திரவாக்கு.

66

விண்ணவர் முதலா வேறோர் இடமாக்,

கொண்டுறை விசும்பே கொல்நின் ஆகம்

என்றார் பட்டினத்து அடிகள்.