உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

காபாலி:

பௌ. பிக்கு:

காபாலி:

பௌ. பிக்கு: காபாலி:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

தாங்கள் என்னை மன்னித்தால், அதுவே சந்தோஷம். நான் போய் வருகிறேன்.

வணக்கம். போய்வாரும். மீண்டும் சந்திப்போமாக. அப்படியே.

தேவசோமா, கண்ணே! போகலாம் வா!

(போகிறார்கள்.)

பரதவாக்கியம்

உலகத்தின் நன்மைக்காக ஓமத்தீ வளர்வதாக பசுக்கள் பாலை நிறைய சொறிவதாக, விப்பிரர் வேதம் ஓதுவாராக, ஞாயிறும் திங்களும் உள்ள வகையில் உலகம், தீயவை நீங்கி நன்மை பெற்று வாழ்வதாக, பகைவர்களை வென்ற வீரத் தோள்களையுடைய சத்துருமல்லன்24 ஆட்சியின் கீழ் இன்பமும் அமைதியும் என்றும் தங்குவதாக.

முற்றிற்று.

  • * *

1.

2.

3.

4.

அடிக்குறிப்புகள்

உலகமாகிய பாத்திரத்தில் நிறையக்கடவது என்னும் பொருள் உள்ள வியாப்தாவனி பாஜனம் என்று மூலநூலில் கூறப்பட்டுள்ளது. இதில், இந்நாடக நூலாசிரியராகிய மகேந்திர விக்ரமவர்மருடைய சிறப்புப் பெயர்களில் ஒன்றான அவனிபாஜனன் என்பது ஒலிக்கும்படி இச்சொல் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், இந்நாடக நூலாசிரியரான மகேந்திரவிக்ரமவர்மருடைய சிறப்புப் பெயர்களான மத்தவிலாசன், குணபரன் என்னும் பெயர்கள் அமைந்துள்ளன. யௌவன குணபர மத்தவிலாசப் பிரஹசனம் என்பதற்கு, காளைப் பருவத்திற்கு இயல்பாக உள்ள களியாட்டம் பொருந்திய நகைச்சுவை நாடகம் என்பது பொருள்.

பரம விரதம் என்பது இங்கே காபாலிக விரதத்தைக் குறிக்கிறது. குடி மயக்கத்தால், தேவ சோமை என்பதற்குப் பதிலாக, சோமதேவி என்று வேறொருத்த பெயரைக் கூறுகிறான். அதனால், தேவசோமை கோபிக்கிறாள்.