உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

111

ஒன்று இருக்கிறது. அதுவும் சந்தியா தாண்டவத்தைக் குறிக்கிறது.(படம் 7 காண்க). இந்தத் தாண்டவத்தில், தாண்டவமூர்த்தியின் காலடியில் முயலகன் உருவம் காணப்படுகிறது. தாண்டவமூர்த்தியின் வலது கையொன்றில் வியப்புக்குறியும். (விஸ்மயக் குறியும்), மற்றொரு வலது கையில் மயிலிறகு பிடித்திருப்பது போன்றும் காணப்படுகின்றன. ஓர் இடது கையை வலது பக்கமாக (கஜஹஸ்தம்) நீட்டியிருக்கிறார். மற்றோர் இடது கையில் கட்டுவாங்கம் ஏந்தியிருக்கிறார். கட்டுவாங் கத்தின் உச்சியில் எருது உருவம் இருக்கிறது. சிவனுடைய எருதுக் கொடியின் அடையாளம் இது.

கால்களின் கீழே முயலகன் உருவம் காணப்படுகின்றது. இறைவ னுடைய கால்கள் முயலகர்களின்மேல் கூத்தாடும் பாவனையைக் காட்டுகின்றன.

வியப்பு

வலது கைகளில் முத்திரையும் மயிலிறகு பிடித்திருக்கும் முத்திரையும் காணப்படுவதனாலே, இந்தத் தாண்டவம் காத்தல் செயலாகிய சந்தியா தாண்டவம் என்பதில் ஐயமில்லை.

எல்லோரா சிற்பம்

சந்தியா தாண்டவத்தின் மிக அழகான சிற்பம் எல்லோரா என்னும் இடத்தில் உள்ள கயிலாசநாதர் கோயில் என்னும் குகைக் கோயிலின் கற்பாறையில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கியமைக்கப் பட்டுள்ளது. கண்ணையும் கருத்தையும் கவருகிற இந்த அழகான சிற்பம் கலையழகு நிரம்பியது. ஆனால், அந்தோ! கலைப்பெருமை உணராத கயவர்களால் இது பிற்காலத்தில் சிதைக்கப்பட்டுள்ளது. சிதைந்த நிலையிலும் இச்சிற்பத்தின் அழகும் அமைப்பும் கலைச் செல்வரின் உள்ளத்தைக் கவர்கின்றன. இந்தப் புடைப்புச் சிற்பத்தைப் புனையா ஓவியமாக (Out line drawing) வரைந்து காட்டியுள்ளோம்.

(படம் 8 காண்க.)

இந்த ஓவியத்தைப் பாருங்கள். இதில் தாண்டவப்பெருமான் மாலைக்கூத்தை நிகழ்த்துவதாகக் காட்டப்படுகிறார். சடைமுடி அவிழாமல், நிலாப்பிறை, கங்கை, கொக்கிறகு இவற்றைப் புனைந்து அழகுற விளங்குகிறது. நெற்றிக் கண்ணுடன் கூடிய திருமுகம், அமைதியும் அழகும் உவகையும் பெற்றுத் திகழ்கிறது. நீண்ட காதுகளில் தோடுகள் உள்ளன. கார்க்கோடகன் என்னும் பாம்பைத்