உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

இந்த மூர்த்தத்தில் வலது கையில் தீச்சுடர் இருப்பது காண்க. சாதாரணமாகத் துடி வலது கையிலும், தீச்சுடர் இடது கையிலும் இருப்பது வழக்கம். அந்த வழக்கத்திற்கு மாறாக இச்சிற்பத்தில் தீச்சுடர் வலது கையில் ஏந்தி முதன்மை பெற்றிருக்கிறது; துடி இடது கையில் சென்று சிறப்புப் பெறாமல் இருக்கிறது. ஆகவே, தீச்சுடர் முதன்மை பெற்றிருக்கிற இச்சிற்பம் சங்கார தாண்டவம் என்பதில் ஐயமில்லை.

என்று

“அரன் அங்கி தன்னில் அறையில் சங்காரம் 6 திருமந்திரம் கூறுகிறது. "சாற்றிடும் அங்கியிலே சங்காரம்” என்று உண்மை விளக்கம் கூறுகிறது. எனவே, இந்தத் தாண்டவத்திலே அங்கியாகிய தீச்சுடர் வலது கையில் முதன்மை பெற்றிருப்பதனாலே இத்தாண்டவம் சங்கார தாண்டவம் ஆகும்.

இதில் வீசிய கையாகிய கஜஹஸ்தமும், குஞ்சிதபாதமாகிய தூக்கிய திருவடியும் ஒன்றுக்கொன்று சேர்ந்து இராமல் மாறாக விலகிப் பிரிந்து உள்ளன. எனவே, அருளல் (மோட்சம்-வீடுபேறு) என்னும் செயல் இதில் நிகழவில்லை என்னும் குறிப்பும் காணப்படுகிறது. சங்கார தாண்டவமூர்த்தம், இது ஒன்றுதான் நமக்குக் கிடைத்திருக்கிறது.

கால்மாறியாடிய (மாறுகால்) தாண்டவம் வேறு; சங்கார தாண்டவமாகிய அழித்தல் தாண்டவம் வேறு. கால்மாறியாடிய தாண்டவத்தில் வலது கையில் துடியும் இடது கையில் தீச்சுடரும் உள்ளன. காலில் மட்டும் மாறுதல் காணப்படுகிறது. தூக்கியிருக்க வேண்டிய இடதுகால் ஊன்றிய பாதமாகவும், ஊன்றிய பாதமாக இருக்க வேண்டிய ய திருவடி தூக்கிய திருவடியாகவும் அமைந்திருக்கின்றன. மதுரையில் கால்மாறியாடின திருவிளையாடல் நடந்ததாகப் புராணம் கூறுகிறது. திருப்புத்தூர் தாலுகா வன்னியன் ஆரக்குடி சிவன் கோவிலில் உள்ள மாறுகால் தாண்டவ உருவத்தைக் காண்க. (படம் 9-A காண்க).

எனவே, இந்தச் சிற்பத்தில் (படம் 10-இல் உள்ள) தாண்டவம் சங்கார தாண்டவம் என்பதில் ஐயம் இல்லை.