உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

பஞ்சமுக வாத்தியத்தின் ஐந்து முகங்கள்

மேற்கு சத்தியோஜதம் - ஆக்கல்

1.

2.

வடக்கு - வாமதேவம் - காத்தல்

3.

தெற்கு - அகோரம் - அழித்தல்

4.

5.

கிழக்கு - தத்புருஷம் - மறைத்தல் வானம் - ஈசானம் - அருளல்

பிற்காலச் சோழர்கள் பெரிய சோழ சாம்ராஜ்ஜியத்தை அமைத்து அரசாண்டார்கள். அவர்கள் சைவசமயத்தவர். பல பெரிய சிவன் கோவில்களை நிறுவினார்கள். அவர்கள் காலத்தில் சாக்கைக் கூத்தர் என்னும் ஆடலாசிரியர்கள் தாண்டவத்தைக் கோவில்களில் நிகழ்த்தி னார்கள். சாக்கைக் கூத்தரின் சாக்கைக் கூத்துகள் நிகழ்ந்தபோது பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

தாண்டவக் கூத்துகளைக் கோவில்களில் ஆடுவதற்காகவே சாக்கையர் என்னும் ஆடலாசிரியர்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களின் பெயர்கள் சில சாசனங்களில் காணப்படுகின்றன. திரு வெள்ளறைச் சாக்கை என்னும் ஆடலாசிரியருக்கு நிலம் தானம் செய்யப்பட்டிருந்த செய்தியைத் தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தாலுக்கா, திருவிடைமருதூர் சிவன் கோவில் சாசனம் கூறுகிறது.

1

சாக்கை மாராயன் விக்கிரம சோழதேவன் என்னும் ஆட லாசிரியரைப் பற்றித் திருச்சி மாவட்டம், உடையார்பாளையம் தாலுக்கா, காமரசவல்லி சிவன் கோவில் சாசனம் கூறுகிறது.2 விக்கிரமாதித்தன் முதுகுன்றன் என்னும் விருதராஜ பயங்கர ஆசாரியனைப் பற்றி இன்னொரு சாசனம் கூறுகிறது.3 குமரன் சீகண்டன் என்னும் ஆட லாசிரியனை மற்றொரு சாசனம் கூறுகிறது. பரமசிவன் பொன்னன் ஆன கலாவினோதப் பேரரையன் என்னும் ஆடலாசிரியனை மற்றொரு சாசனம் கூறுகிறது.

5

3

4

இவற்றினால் சோழர் காலத்திலே பஞ்சமுக வாத்தியமும் சாக்கையாரின் தாண்டவக் கூத்துகளும் செயல்முறையில் இருந்தன என்பது தெரிகின்றது.