உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

143

ஒவ்வொரு முகத்துக்கும் ஒவ்வொரு திசையின் பெயரைப் பொருத்திக் கூறுவதற்கு மாறாகச் சதாசிவ மூர்த்தியின் ஐந்து முகங்களின் பெயரைப் பொருத்திக் கூறுவதுமுண்டு, சிவபெருமானின் சதாசிவ மூர்த்தத்துக்கு சத்தியோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் என்னும் ஐந்து முகங்கள் உண்டு. சத்தியோஜாத முகத்தினால் சிருட்டித்தொழிலையும், வாமதேவ முகத்தினால் திதியையும், அகோர முகத்தினால் சங்காரத் தொழிலையும், தத்புருட முகத்தினால் திரோபவச் செயலையும், ஈசான

முகத்தினால் அனுக்கிரகத்தையும் சதாசிவ மூர்த்தமாக இருந்து சிவபெருமான் செய்கிறார் என்று ஆகமங்கள் கூறுகின்றன. இந்த ஐஞ்செயலையும் குறிக்கும் ஐந்து முகங்களையும் பஞ்சமுக வாத்தியத்தில் பொருத்திக் கூறுவதுண்டு. அவையாவன: வடக்கு-வாமதேவம், தெற்கு-அகோரம், மேற்கு-சத்தியோஜாதம், கிழக்கு-தத்புருஷம், நடுவு-ஈசானம். இதைப் படத்தின் மூலமாக இன்னும் சற்று விளக்கிக் கூறுவோம். (படம் காண்க). இதிலிருந்து தெரிவதென்ன? ஐஞ்செயல் தாண்டவத்துக்கும் பஞ்சவாத்தியத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதும், ஐஞ்செயல் தத்துவத்தை விளக்குவதற்காகவே பஞ்சமுக வாத்தியம் அமைக்கப்பட்டது என்பதும் தெரிகின்றன.

2

1

5

4

3