உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பு

· 1

பஞ்சமுக வாத்தியம்

நடராச சிற்ப உருவங்கள் சிலவற்றில் குழல், தாளம், பஞ்சமுக வாத்தியம் முதலிய இசைக்கருவிகள் வாசிப்பது போல சிற்ப உருவங்கள் அமைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். அந்த இசைக் கருவிகளில் பஞ்சமுக வாத்தியம் குறிப்பிடத்தக்கது. நடராசப் பெருமான் திருத்தாண்டவம் செய்யும்போது நந்தி தேவர் பஞ்சமுக வாத்தியத்தை வாசிப்பதாகக் கூறுவர். பஞ்சமுக வாத்தியத்துக்கும் நடராசரின் ஐஞ்செயல் தாண்டவத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. ஆகவே, அவற்றை விளக்கிக் கூறுவோம்.

பஞ்சமுக வாத்தியம் என்பது பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட ஐந்துமுகம் உடைய பெரிய பானைபோன்ற ஒரு தோற்கருவி. இதற்கு ஐந்து முகங்கள் உண்டு. ஆகையினால், பஞ்சமுக வாத்தியம் என்று பெயர்பெற்றது. பஞ்சமுக வாத்தியத்தின் நடுவில் ஒரு முகமும், அதைச் சூழ்ந்து நான்கு பக்கங்களில் நான்கு முகங்களும் இருக்கின்றன. நடுவில் உள்ள முகம் சற்றுப் பெரியதாகவும் உயர்ந்தும் அமைந்திருக் கிறது; பக்கங்களில் உள்ள முகங்கள் சற்றுத் தாழ்ந்தும் சிறிய முகங்க ளாகவும் அமைந்துள்ளன. ஐந்து முகங்களும் பசுவின் தோலினால் போர்த்துக் கட்டப்பட்டிருக்கின்றன. இது தோற்கருவி.

பஞ்சமுக வாத்தியம் அதிகக் கனம் உள்ள பெரிய கருவி. ஆகவே, அதை மரச்சட்டத்தின்மேல் அமைப்பது வழக்கம். சட்டங்களின் கீழே சக்கரங்கள் பொருத்தப்பட்டிருப்பதனால், அதை வேண்டிய இடங்களுக்கு நகர்த்திக் கொண்டு போகலாம். (படம் 20).

பஞ்சமுக வாத்தியங்கள் தமிழ்நாட்டின் சில முக்கியமான கோவில்களில் இருந்தன. திருவாரூர், திருத்துறைப் பூண்டி கோவில் களில் இந்த வாத்தியம் இருந்தது. சென்னை அரசாங்கத்தின் காட்சிச் சாலையிலும் இவ்வாத்தியம் காட்சி அளிக்கிறது. ஒரு காலத்தில் அக்