உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய மனோன் மணியம் என்னும் இந் நாடகநூல் தமிழில் உள்ள நாடக நூல்களில் முதன்மையானது. முழுவதும் செய்யுள் நடையில் அமைந்து இலக்கிய வளம் அமையப்பெற்ற இந்தச் சிறந்த நாடக நூலைக் கற்றோரும் மற்றோரும் புகழ்ந்து போற்றுவது சரியானதே, சரித்திரத் தொடர் புடையது போன்றும் தமிழ் நாட்டில் நிகழ்ந்ததுபோன்றும் காணப்படுகிற இந் நாடகக் கதை உண்மையில் கற்பனைக் கதையே; தமிழ்நாட்டில் நிகழ்ந்த சரித்திரக்கதை அல்ல இந்தக் கதைக்கு மூலக்கதையாய் இருப்பது லிட்டன் பிரபு அவர்கள் ஆங்கிலத்தில் செய்யுளாக இயற்றி யுள்ள The Lost Tales of Miletus அல்லது The Secret way என்னும் சிறு நூலாகும். இந்தச் செய்யுளில் கூறப்படுகிற கதையைத் தமிழ்நாட்டு மரபுக்கும் தமிழ்நாட்டுச் சூழ்நிலைக்கும் ஏற்ப அமைத்துக் கருத்தினைக் கவரும் அழகான நாடக நூலாகச் சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றியுள்ளார்கள். எனவே, இது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு பழைய கதையைத் தழுவி எழுதப்பட்ட ஒரு கற்பனைக் கதையாகும். இது தமிழ்மொழியின் சிறந்த கலைச் செல்வங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. எல்லோரும் படித்து இன்புறக்கூடிய நல்ல நூலாக அமைந்துள்ளது.

மனோன்மணீய நாடக நூலை ஆராய்வதற்கு முன்பு இந்நூலை இயற்றிய ஆசிரியர் சுந்தரம் பிள்ளையவர்களின் வரலாற்றை அறிந்து

கொள்ளவேண்டும்.

நூலாசிரியர் வரலாறு

பேராசிரியர் இராய்பகதூர் சுந்தரம் பிள்ளை அவர்களின் முன்னோர் தமிழ்நாட்டிலிருந்து மலையாள நாட்டில் திருவாங்கூர் இராச்சியத்தின் துறைமுகப்பட்டினமாகிய ஆலப்புழை என்னும் ஊரில் குடியேறியிருத்தனர். அந்தக் குடும்பத்தில் வந்தவர். சுந்தரம் பிள்ளை யின் தகப்பனார் பெருமாள் பிள்ளையவர்கள். பெருமாள் பிள்ளை துணிகள் விற்கும் அறுவை வாணிகராக இருந்தார். அவர் சைவ சமயப் பற்றும் தமிழ் மொழிப் பற்றும் உடையவர். அவருடைய மனைவியார்