உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

19

பெயர் மாடத்தி அம்மையார். இவர்களுடைய மகனார் கல்வியறிவில் புகழ்பெற்று விளங்கிய பேராசிரியர் சுந்தரம் பிள்ளை யவர்கள்.

சுந்தரம் பிள்ளையவர்கள் கி.பி 1855-ஆம் ஆண்டில் பிறந்து நாற்பத்திரண்டு வயது வாழ்ந்து 1897-இல் காலமானார். 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே வாழ்ந்த பிள்ளையவர்கள். இருபத் திரண்டு ஆண்டுகள் இளமைப் பருவத்தில் கழித்தார். மிகுதி இருபது ஆண்டுகள் தமிழ்மொழிக்காகத் தொண்டு செய்தார். இந்தக் குறுகிய காலத்தில் இவர் செய்த தொண்டு சிறந்தது. பிள்ளையவர்கள் மேலும் இருபது முப்பது ஆண்டு வாழ்ந்திருப்பாரானால் தமிழ்மொழி, தமிழ் வரலாறு, நாட்டு வரலாறு முதலிய துறைகளில் பல சிறந்த தொண்டுகளைச் செய்திருப்பார் என்பதில் ஐயமில்லை.

இளமையில் ஆலப்புழையில் ஒரு பாடசாலையில் கல்வி பயின்றார். சிறு வயதிலேயே இவருடைய தந்தையார் இவருக்குத் தேவாரம் திருவாசகம் திருக்குறள் முதலிய நூல்களைக் கற்பித்தார். இளமையி லேயே சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்றும் உறுதியும் இவருக்கு ஏற்பட்டிருந்தது. மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் சுந்தரம் பிள்ளையவர்களுக்கு மிகுந்த பற்றும் ஆர்வமும் உண்டு. பிற் காலத்தில் அவர் இயற்றிய மனோன்மணீய நாடக நூலில், திருவாசகத்தி லிருந்து சொற்களையும் பல இடங்களில் ஆண்டிருப்பதிலிருந்து இதனை நன்கறியலாம். ஆலப்புழை பாடசாலைப் படிப்பு முடிந்த பிறகு திருவனந்தபுரத்தில் உயர்தரப் பாடசாலையில் கல்வி பயின்று மெட்ரிகுலேஷன் பரீட்சையின் தேர்ச்சியடைந்தார். பிறகு திருவனந்த புரம் மகாராஜா கல்லூரியில் சேர்த்து கல்வி பயின்று பி.ஏ. பரீட்சையில் தேறினார். அந்தக் கல்லூரித் தலைவராகிய மிஸ்டர் ராஸ் என்பவர், இவருடைய திறமையைக் கண்டு அக் கல்லூரியிலேயே இவரை ஆசிரியராக அமர்த்தினார். அந்த ஆண்டிலேயே பிள்ளைவர்கள் சிவகாமி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். அப்போது இவருக்கு இருபத்தொரு வயது.

சுந்தரம்பிள்ளை ஆசிரியராக அமர்ந்து எஃப்.ஏ., பி. ஏ. வகுப்பு களுக்குச் சரித்திரப் பாடங்களையும், பி.ஏ. வகுப்புக்குத் தத்துவ சாஸ்திரப் பாடமும் கற்பித்துவந்தார். கற்பித்து வந்ததோடு அமையாமல் தாமும் கல்வியை மேன்மேலும் கற்று வளர்த்துக் கொண்டார். அடுத்த ஆண்டில், திருநெல்வேலியில் இருந்த ஆங்கிலத் தமிழ் உயர்தரப்