உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

பாட சாலைக்குத் தலைமையாசியராக நியமிக்கப்பெற்றார். சென்னைக் கல்வி இலாகாக தலைவராக இருந்த டாக்டர் டன்கன் அவர்கள். மேற்படி பாட சாலைத் தலைமைப் பதவிக்குத் திறமைசாலி ஒருவர் வேண்டுமென்று கேட்க, மிஸ்டர் ராஸ் அவர்கள் சுந்தரம் பிள்ளையே அதற்குத் தகுந்தவர் என்று கண்டு இவரைச் சிபாரிசு செய்தார். திருநெல்வேலிக்குச் சென்று தலைமை ஆசிரியராக அமர்ந்த பிள்ளையவர்கள். தமது முயற்சி யினால் அப் பாடசாலையை இரண்டாந்தரக் கல்லூரியாக உயர்த்தி னார். இப்போதும் அக் கல்லூரி திருநெல்வேலி இந்து காலேஜ் என்று பெயர்பெற்று விளங்குகிறது.

·

திருநெல்வேலியில் இருந்தபோது சுந்தரம் பிள்ளையவர்கள் கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் என்னும் பெரியாருடன் பழகி அவரைச் சமய குருவாகக் கொண்டார். அவரிடம் சமய நூல்களைக் கற்றுத் தத்துவ ஆராய்ச்சி செய்தார். அக்காலத்தில்தான் நூற்றொகை விளக்கம் என்னும் சயன்ஸ் சம்பந்தமான நூலையும், மனோன்மணீய நாடக நூலையும் எழுதத் தொடங்கினார். இரண்டாண்டுகள்தான் அங்குப் பணியாற்றினார். பிறகு, மீண்டும் திருவனந்தபுரத்தில் மகாராஜா கல்லூரியில் அலுவல் புரிந்தார். பணியாற்றிக்கொண்டே ங்கில இலக்கியங்களையும் தமிழ் இலக்கியங்களையும் மேன் மேலும் ஆழ்ந்து பயின்றார். எபிகிறாபி என்னும் பழைய கல்வெட் டெழுத்துச் சாசனங்களை ஆராய்வதிலும் ஈடுபட்டிருந்தார். திருவாங் கூர் சமஸ்தானத்தில் சாசன ஆராய்ச்சி இலாகா ஏற்படுத்தி அதன் முதல் தலைவராகவும் பணியாற்றினார்.

அக்காலத்தில் இருந்த விசாகத் திருநாள் மகாராஜா அவர்கள், பிள்ளையவர்களின் திறமையைக் கண்டு, திருவனந்தபுரம் அரண் மனையில் இவரைப் "பிறவகை சிரஸ்தார்” உத்தியோகத்தில் அமர்த்தினார். இவ்வலுவலில் இருந்த போது பிள்ளையவர்கள் சட்டக்கலை நூல்களைப் பயின்றார். ஆனாலும், இந்தப் பணியில் அவர் அதிக காலம் இருக்க வில்லை. மகாராஜா கல்லூரியின் முதல்வராக இருந்த டாக்டர் ஹார்வி அவர்கள் அலுவலை விட்டு ஓய்வுபெற்றுத் தாய்நாடு சென்றார். அவர் இருந்த இடத்தில் சுந்தரம் பிள்ளையவர்கள் முதல்வராக அமர்த்தப் பெற்றார்.

பிள்ளையவர்கள் கல்லூரியில் தமது கடமைகளைச் செய்து கொண்டே அதனுடன் சமயத் தொண்டும் இலக்கியத் தொண்டும் செய்துவந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்துடன் தொடர்புகொண்டு