உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

யத்தனிக்குமளவில், சுந்தர முனிவர் ஆஞ்ஞையால் ஜீவகன் மனந்தெளிந்து மகளையும் மருமகனையும் வாழ்த்த அது கண்ட யாவரும் கண்படைத்த பெரும் பயன் அடைந்து அருட்டிறம் புகழ்ந்து ஆனந்தம் அடைந்தனர்.

وو

இதுவே இந் நாடகத்துள் வரும் கதையின் சுருக்கம். இக் கதையை வேண்டுழி வேண்டுழி விரித்து ஆங்கிலேய நாடக ரீதியாக ஜீவகனாதியராகிய கதா புருஷர்களுடைய குணாதி சயங்கள் அவர் அவர் வாய்மொழிகளால் வெளிப்படும்படி செய் திருப்பதுமன்றி “வாழ்த்து வணக்கத்துடன்” தொடங்கி, “நாற் பொருள் பயக்கும் நடை யினைக் கூடிய அளவும் தழுவி, “தன்னிகரில்லாத் தலைவனையும் தலைவியையும் உடைத்தாய், “மலைகட னாடு வளநகர் பருவம் இருசுடர்த் தோற்றம்" என்றின்னவும் பிறவும் ஏற்புழிப் புனைந்து, “நன் மணம் புணர்தலே" முடிவாகக் கொண்டு, “மந்திரம் தூது செலவிகல் வென்றி” எனச் சந்தியிற் றொடர்ந்து "அங்கம் களம்” என்னும் பாகுபாடுடைத்தாய் நிற்கும் இந் நாடகத்தில் தமிழ்க்காவிய வுறுப்புக்கள் பற்பல ஆங்காங்கு வருவித்திருப்பதும் அன்பொடு பார்ப்போர் கண்ணுக்குப் புலப்படலாம்.

இல்லறம் துறவறம் பத்தி ஞான முதலிய மோக்ஷ சாதனங்கள் பொருத்தமுடைய சந்திகளில் வெளிப்படையாக அமைந்திருப்பது மல்லாமல் இக் கதையினையே ரூபகமாலாலங்காரமாகக் கருதில், தத்துவ சோதனை செய்யும் முமுக்ஷகளுக்கு அனுகூலமாகப் பவிக்கவும் கூடும். அப்படி உருவக மாலையாகக் கொள்ளுங்கால், ஜீவகனைச் சார்போத மான ஜீவாத்மா ஆகவும், அவனைத் தன் வசப்படுத்தியாட்டுவித்த குடிலனை மாயாசக்தியாகவும், மனோன்மணியை ஜீவாத்மாவின் பரி பக்குவ காலத்துதிக்கும் முத்திக்குரிய உத்தம பாகமான சுத்ததத்துவ மாகவும், அவள் தோழி வாணியைப் புத்திதத்துவமாகவும், அவள் காதலனாகிய நடராஜனை ஞானதாதாவான உபாசனா மூர்த்தியாகவும், புருடோத்தமனை அனுக்கிரக சத்தியாகவும், சந்தர முனிவரைக் கருணாநிதியாகிய ஞானாசாரியராகவும், ஜீவகனுக்குத் தலைநகராகக் கூறிய முத்திபுரம் என்னும் மதுரையை ஜீவாத்மா வுதித்தொடுங்கும் மூலத்தானமாகவும், அவனும் குடிலனும் சேர்ந்து கட்டிய நெல்வேலிக் கோட்டையை மாயாகாரியமான அன்னமயாதி பஞ்சகோசத்தாலமைந்த சரீரமாகவும், அதிலிருந்து மனோன்மணி கண்ட கனாவைச் சுத்தாந்தக் கரண ஜநிதமான பரோக்ஷ ஞானமாகவும், சேரதேசத்தில் புருடோத்