உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

சேதத்திற்கு மிடமில்லாமல், பாண்டியனையும் அவன் கோட்டை யினையும் சுலபமாகப் பகைவன் கையில் ஒப்பித்து விட்டால், ஒரு குடம் ஜலத்திற்கும் ஒரு பூமாலைக்குமாகச் சமரை நிறுத்தித் தன்னூருக்குத் திரும்ப எண்ணின சேரன், தன்னையே முடிசூட்டிச் சிங்காதனம் சேர்க்காதொழிவனோ என்ற பேராசை பிடர்பிடித் துந்தவும் ஊழ்வலி யொத்து நிற்கவும் செய்ததினால், அத் துரோகியாகிய குடிலன் மெள்ள மெள்ளப் பாசறை நோக்கிப் போகவே, கனாவில் மனோன்மணியினது உருவங்கண்டு காமுற்றநாள் முதலாக யாதொன்றிலும் மனஞ் செல்லாத வனாய் இரவெல்லாம் நித்திரையற்றுத் தனியே திரிந்து வருந்தும் புருடோத்தமனை நடுவழியிற் சந்தித்துக் கொண்டான். அதுவும் தனது பாக்கியக் குறியாகவே மதித்து மகிழ்ந்த குடிலன், எதிர்ப்பட்ட சேரனிடம் தனது துரோக சிந்தனையை வெளிப்படுத்த, தன்னயங் கருதாச் சதுரனாகிய புருடோத்தமன் தன் சேவகரைக் கூவிக் குடிலன் காலிலும் கையிலும் விலங்கிடுவித்து, “வீரமே உயிராகவுடைய வஞ்சி வேந்தருக்கு வெற்றியன்று விருப்பு; இவ்வித இராஜ துரோகிகளைக் காட்டிக் கொடுத்து, மாற்றலராகிய மன்னவரையும் இரட்சித்துப் பின்பு வேண்டு மேற்பொருது தமது வீரம் நாட்டலேயாம்” என அவனுக்கு விடைகூறி, அவன் கூறிய சுருங்கை வழியே ஜீவகன் சபைக்கு வழிகாட்டி வரும் படி கட்டளையிட்டான். இம் மொழி கேட்ட பாவி இடியொலி கேட்ட பாம்புபோலத் திடுக்கிட்டுத் திகைத்து நின்றான். ஆயினும் தானிட்ட கட்டளை மீறில் சித்திரவதையே சிக்ஷையா மென்று சேரன் சினந்துகூற, அதற்கு அஞ்சி அவ்வாறே கற்படைக்கு வழிகாட்டி நடப்பானாயினன்.

இப்பால் ஜீவகன் தன் மகளைப் பலதேவனுக்கு மணஞ் செய்வித்து இருவரையும் முனிவர் ஆச்சிரமம் அனுப்புவதே தகுதியெனத் தெளிந்த வாறே அச் செய்தியை மனோன்மணிக் கறிவிக்க அது அவள் செவிக்குக் காய்ச்சின நாராசம்போலிருந்த தாயினும் தன் பிதாவுக்கு நேர்ந்த ஆபத்துக் காலத்தை நன்குணர்ந்து அவனுக்கேற்றபடி நடந்து அவனைத் தேற்றுவதே தற்கால நிலைக்கேற்ற தனது கடமைப்பாடெனத் தெளிந்து அங்ஙனம் ஒப்புக்கொண்டதுமன்றி, தன்பாடு எங்ஙனம் ஆயினும் தன்னைச் சார்ந்தவர் சுகத்தைப் பாராட்டும் பெருங் குணத்தால், காதல் கொண்டிருக்கும் வாணி, தன் கருத்திற்கிசைய நடராஜனை மணஞ் செய்து கொள்ளவும், நெடுங்காலமாகத் தன் குடும்ப ஊழியம் தலைக்கொண்டு நின்ற நாராயணன் செய்த தவறு யாதேயாயினும் அதனைப் பொறுத்து அவனைச் சிறைவிடவும் தன் பிதாவினிடம்