உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

39

கடமையென ஒரு தலையா உறுத்து முனிவர் கூற, மன்னவன் அங்ஙனம் இயைந்து நடுநிசியில் முனிவரோடு தன் மகளை ஆச்சிரமம் அனுப்புவதாக ஒப்புக் கொண்டான். முனிவரும் சம்மதித்து அகன்றார். உடனே நிசாமுகம் தோன்றிற்று. தன் அருமை மகளைப் பிரியும் வருத்தம் ஒருபுறமும் பிரியாதிருக்கில் அவட் குண்டாகும் கெடுதியைக் குறித்த அச்சம் மற்றொரு புறமுமாக ஜீவகன் சித்தத்தைப் பிடித்தலைக்கக் கலக்கமுற்று, குருமொழியிலும் ஐயம் பிறந்து, குடிலனை வரவழைத்து, முனிவர் அதிரகசியமாகக் கூறிய சுருங்கை முதல் சகல சங்கதியும் தெரிவித்து அவனது அபிப்பிராயம் உசாவுவா னாயினன். அதற்கு அப்பாதகன் இதுவே தன் மனக்கோள் நிறை வேற்றற்குரிய காலமெனத் துணிந்துகொண்டு மனோன்மணியை இடம் பெயர்ப்பது தற்கால நிலைமைக்கு எவ் விஷயத்திலும் உத்தம மெனவும், ஆயினும் மணவினை முடியா முன்னம் அனுப்புவதால், கன்னியாகிய அவளுக்குப் பழிப்புரைக் கிடமாவதேயல்லால் அரசனுக்குச் சற்றும் சித்த சமாதானத்திற் கிடமில்லையெனவும் அவன் நெஞ்சில் சஞ்சலம் விளைவித்து, ஜீவகன் தானாகவே பலதேவனுக்கு மனோன்மணியை அன்றிரவே கலியாணம் செய்துகொடுத்து முனிவர் ஆச்சிரமத்திற்கு மகளையும் மருமகனையும் சேர்த்து அனுப்புவதாகத் துணியும்படி தூண்டி விட்டுத் தான் நெடுங்காலமாகக் கொண்டிருந்த அபிலாஷத்தைப் பூர்த்திப்படுத்திக் கொண்டான்.

ஆயினும் அவ்வளவோடு நில்லாமல், தன்னையறியாமல் முனிவர் வகுத்த கள்ள வழியைக் கண்டறிய வேண்டுமென்று விருப்புற்று, அது அவர் வந்த அன்றே தமக்காகப் பெற்றுக் கொண்ட அறைக்குச் சம்பந்தப் பட்டிருப்பதே இயல்பென ஊகித்து, அவ்வறையிற் சென்று நோக்கி அச் சுருங்கையைக் கண்டுபிடித்து அவ் வழியேபோய் வெளியேறிப் பார்க்குங்கால், சத்துரு பாசறை அருகே தோன்றிற்று. அன்று பகலில் தன் மகனுக்குச் சண்டையில் நேரிட்ட மோசடிபோலத் தனக்கும் இனி வரக்கிடக்கும் போரில் உட்பகையாலோ வெளிப்பகையாலோ யாதேனும் அபாயம் நேரிட்டுவிடலாமென்ற பயத்தாலும், மனோன்மணி விவாகம் எப்படியும் அன்றிரவே நடந்தேறுமென்ற துணிவாலும், நடந்தேறில் ஜீவகனது பிரீதியால் சித்திக்கத்தக்கது வேறொன்றுமில்லையென்ற உறுதியாலும், கோட்டைக்குத் திரும்ப வேண்டுமென்ற எண்ணம் விடுபட, தான் வருந்திக் கண்டுபிடித்த கற்படையைச் சேரனுக்குக் காட்டி அவ்வழியே அவனை அழைத்துச் சென்று யாதொரு உயிர்ச்