உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன்மணீயம்

பாயிரம்

கடவுள் வணக்கம்

(நேரிசை வெண்பா)

வேத சிகையும் விரிகலையும் மெய்யன்பர் போதமும் போய்த்தீண்டாப் பூரணமே-பேதமற வந்தெனை நீ கூடுங்கால் வாழ்த்துவர்யார் வாராக்கால் சிந்தனையான் செய்ம்முறையென் செப்பு.

தமிழ்த்தெய்வ வணக்கம்

(பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா)

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கொழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில், தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே தெக்கணமும்அதிற்சிறந்த திரவிடநல் திருநாடும்; அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே.

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையரு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமும்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.

-

1

2

இவையிரண்டும் ஆறடித்தரவு

கடல்குடித்த குடமுனியுன் கரைகாணக் குருநாடில் தொடுகடலை யுனக்குவமை சொல்லுவதும் புகழாமே.

1

ஒருபிழைக்கா அரனார்முன் உரையிழந்து விழிப்பாரேல் அரியதுன திலக்கணமென் றறைவதுமற் புதமாமே.

2