உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

53

சூழ்ச்சிசெய்து தடுக்கவேண்டும் என்று எண்ணுகிறான். தனக்கு நம்பிக்கையுள்ள ஆளைச் சேரநாட்டரசனிடம் தூது அனுப்பி, புருஷோத்தமனுக்குச் சினத்தையும் பகையையும் மூட்டி, அவனைப் படையெடுத்து ஜீவகன்மேல் போருக்கு வரும்படி செய்யவேண்டும் என்றும் அப்போர் நடக்கும்போது நெருக்கடியான நிலைமையை உண்டாக்கித் தன் மகன் பலதேவனுக்கு மனோன்மணியை மணம் புரிவிக்கச் செய்வது எளிது என்றும், பிறகு தன் மகன் பலதேவனே பாண்டிநாட்டுக்கு அரசனாவான் என்றும் தனக்குள் சூழ்ச்சி செய்கிறான். பிறகு திருமணச் செய்தி கேட்டு மகிழ்ச்சி யடைந்ததுபோல நடித்துக் கடிதம் கொண்டுவந்த சேவகனுக்கு வெகுமதி கொடுத்து அனுப்புகிறான்.