உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

ஜீவ:

நாரா:

ஜீவ:

நாரா:

ஜீவ:

சக:

குடி:

(நிலைமண்டில ஆசிரியப்பா, தொடர்ச்சி)

தனிமொழி யென்னை?

சற்றும் பிசகிலை.

நீட்டல் விகாரமாய் நினையினும் அமையும். காட்டுவ தெல்லாம் விகாரமே. காணாய் கிழவரின் அழுகை.

சிலவரு டந்தான்.

100 நெடுநாள் நிற்கும் இளையவ ரழுகை.

விடு.விடு. நின்மொழி யெல்லாம் விகடம்.

(நாராயணன் போக)

அறிவிர்கொல் அவளுளம்?

சிறிதியா னறிவன்:

75

(சகடரை நோக்கி)

திருநட ராசனென் றொருவனிங் குள்ளான். பொருவரும் புருடன்மற் றவனே யென்றாள் 105 சொல்வது கேட்டுளர் சிற்சில தோழியர்.

(அரசனை நோக்கி)

நல்லதப் படியே நடக்கிலென்? இவர்க்கும் பொல்லா முரண்டேன்?

சக:

(குடிலனை நோக்கி)

போம்!போம்! உமது

குழந்தையேல் இங்ஙனம் கூறீர்! முற்றும், இழந்திட வோவெனக் கித்தனை பாடு?

110 பூவையை வளர்த்துப் பூனைக் கீயவோ?

(அரசனை நோக்கி)

நீட்டல் விகாரம் - மேலே சொன்ன வெண்பாவில் உள்ள தனிச் சொல், சொற்றதற்காய் என்றிருக்கவேண்டுவது சோற்றதற்காய் என நீண்டதைக் குறிக்கிறது. பொருவரும்

ஒப்பில்லாத.

முரண்டு - பிடிவாதம். பூவை - நாகணவாய்ப் புள்; மைனா என்பர். ஈயவோ - கொடுக்கவோ.

'கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுக்கலாமா' என்பது பழமொழி.