உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

20

25

கண்டு காமங் கொண்டவ ளல்லள்;

பருவம் வருதலாற் பற்றல் விழைந்தனள். அருகுள தெட்டியே யாயினும் முல்லைப் படர்கொடி படரும்; பலதே வனையவள் இடமே பலமுறை யேவி லுடன்படல் கூடும். கூடிலென் கூடா?

91

யாவன் அஃதோ வருமொரு சேவகன்?

(சேவகன் வர)

சேவகன்:

ஜய! ஜய! விஜயீ பவகுடி லேந்திரா?

(திருமுகம் கொடுக்க)

குடி:

(வாசித்து நோக்கி)

நல்ல தப்புறம் நில்லாய்; ஓ! ஓ!

சொல்லிய தார்கொல்? சுந்தர னேயாம்

(சேவகன் ஒருசாரிருந்து தூங்க)

30 அடுத்தது போலும் இம்மணம், அவசியம்

35

நடக்கும். நடக்கிலென்? நமக்கது நன்றே. அரசர்கட் காயுள் அற்பமென் றறைவர்; பிரியமாந் தன்மகட் பிரிந்து வெகுநாள்

வாழான் வழுதி, வஞ்சி நாட் டார்க்குத் தாழார் இந்நாட் டுள்ள ஜனங்களும். அதுவும் நன்றே - ஆயினுங்

கால தாமதஞ் சாலவு மாகும்;

வேறோரு தந்திரம் வேண்டும்; ஆ! ஆ! மாறன் மாண்டான்; மன்றலும் போனது; 40 சேரன் இறுமாப் புடையதோர் வீரன் ஆமெனப் பலரும் அறைவர். அதனால் நாமவன் பால்விடுந் தூதுவர் நலம்போன் மெள்ள அவன்றன் செருக்கினைக் கிள்ளிற் படைகொடு வருவன்; திண்ணம். பாண்டியன்

கொண்டு

விழைந்தனள் விரும்பினாள். வழுதி பாண்டியன். மாறன் பாண்டியன். இறுமாப்பு செருக்கு. கொடுவருவன் வருவான். திண்ணம் - உறுதி.