உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிலன்:

ஐந்தாம் களம்

இடம் : குடிலன் மனை. காலம்: மாலை.

(குடிலன் உலாவ.)

(இணைக்குறள் ஆசிரியப்பா)

(தனிமொழி)

புத்தியே சகல சக்தியும்! இதுவரை

நினைத்தவை யனைத்தும் நிறைவே றினவே. உட்பகை மூட்டிப் பெட்புற் றிருந்த

மதுரையாம் முதுநகர் விடுத்து மன்னனைப் 5 புதியதோர் பதிக்குக் கொணர்ந்து புரிசையுங் கட்டுவித் தோம்நம் இட்டமாம் வகையே நாமே யரசும் நாமே யாவும்;

10

15

மன்னவன் நமது நிழலின் மறைந்தான்;

பிடித்தாற் கற்றை விட்டாற் கூளம்;

மதுரையை நெல்லை இனிமேல் வணங்குமோ?

இதுதனக் கிறைவன் இறக்கில் யாரே

அரச ராகுவர்? -

-

(மௌனம்)

புரவலன் கிளைஞர் புரிசையைக் கேட்கினும்

வெருளுவர். வெல்லார். ஆயினும் -

முழுதும் நம்மையே தொழும்வகை யிலையோ? கருவியுங் காலமும் அறியில் அரியதென்?

ஆ! ஆ! அயர்த்தோம் அயர்த்தோம்!

மயக்கம் மனோன்மணி கொண்டதை முற்றும்

அயர்த்தோம்! ஆ! ஆ! ஆயிழை யொருவனைக்

பெட்பு - விருப்பம். 'பிடித்தால் கற்றை விட்டால் கூளம்' பழமொழி. வெருளுவர் - அஞ்சுவார்கள். அயர்த்தோம் - மறந்தோம். பற்றல் - பற்றுதல்.