உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

90

95

வால்வளை சூலுளைந் தீன்றவெண் முத்தம் ஓதிமக் குடம்பையென் றுன்னுபு காலாற்

பருந்தினங் கவர்ந்துசென் றடம்பிடைப் புதைக்கும் கரும்படு சாலையின் பெரும்புகை மண்டக்

கூம்பிய நெய்தற் பூந்தளிர் குளிர

மேய்ந்தகல் காரா தீம்பால் துளிக்கும்;

அலமுகந் தாக்குழி யலமரும் ஆமை

நுளைச்சியர் கணவரோ டிழைத்திடும் ஊடலில் வழித்தெறி குங்குமச் சேற்றிடை யொளிக்கும்; பூஞ்சினை மருதிடை வாழ்ந்திடும் அன்றில் நளிமீன் கோட்பறை விளிகேட் டுறங்கா; வேயென வளர்ந்த சாய்குலைச் சாலியில், 100 உப்பார் பஃறி யொருநிரை பிணிப்பர். இப்பெருந் தேயத் தெங்கும் இராப்பகல் தப்பினும் மாரி தன்கடன் தவறா.

கொண்மூ வென்னுங் கொள்கலங் கொண்ட அமிழ்தினை யவ்வயிற் கவிழ்த்தபின் செல்புழி

105 வடியும்நீ ரேநம் மிடிதீர் சாரல்.

நன்னீர்ப் பெருக்கும் முந்நீர் நீத்தமும்

111

வால்வளை - வெண்மையான சங்கு. உளைந்து – வருந்தி. ஓதிமம் - அன்னம், குடம்பை - முட்டை. உன்னுபு - நினைத்து. அடம்பு -அடம்பங் கொடி. இது கடற்கரைப் பக்கத்தில் தரையில் படர்வது. மண்ட - நெருங்க. 92-93 வரி. பூந்தளிரைக் குளிர மேய்ந்து அகலும் காராம்பசு. அலமுகம் - கலப்பையின் முனை. அலமரும் - வருந்துகிற. ஊடல் கணவனுக்கும் மனைவிக்கும் உண்டாகும் பிணக்கம். மருது மருதமரம். அன்றில் - அன்றில் பறவை. நளி - பெருமை. மீன்கோட் பறை - மீன் பிடிப்பதற்காக அடிக்கும் பறை. விளி - ஓசை. வேய் - மூங்கில். சாலி - நெல். உப்பார் பஃறி - உப்பு ஏற்றிச் செல்லும் ஓடம். பிணிப்பர் – கட்டுவார்கள். மாரி - மழை. கொண்மூ மழை. கொண்மூ - மேகம். அவ் வயில் - அவ்விடத்தில். முந்நீர் - கடல். ஆக்கல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று நீர்மையையுடையது என்றும். ஆற்றுநீர் ஊற்றுநீர் வேற்றுநீர் என்னும் மூன்று நீரை யுடையது என்றும் பொருள் உடையது.